பிரபல பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி மீது வழக்கு பதிவு... பொய்யான செய்திகளை வெளியிட்டதாக புகார்

அர்னாப் கோஸ்வாமி
அர்னாப் கோஸ்வாமி

கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்து பொய்யான செய்திகள் வெளியிட்டதாக பிரபல பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி உட்பட இருவர் மீது பெங்களூரு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரபல பத்திரிக்கையாளர் அர்னாப் கோஸ்வாமி. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில், நேருக்கு நேர் விவாதங்களை தொகுத்து வழங்கியதன் மூலம் புகழ் பெற்றிருந்தார். பாஜக ஆதரவாளர் என முத்திரை குத்தப்பட்ட இவர் ’ரிபப்ளிக் டிவி’ என்ற பெயரில் தனி ஆங்கில தொலைக்காட்சி சேனலை பின்னர் தொடங்கி புகழடைந்தார்.

கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா
கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா

ரிபப்ளிக் டிவியின் சீஃப் எடிட்டர் பொறுப்பில் அமர்ந்திருக்கும் அர்னாப் கோஸ்வாமி, தொடர்ந்து பாஜக ஆதரவு செய்திகளை வெளியிடுவதாக எதிர்க்கட்சியினர் மத்தியில் சர்ச்சைக்கும் ஆளானார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்பாக உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடுவதாகவும் புகாருக்கு ஆளாகி இருக்கிறார்.

இந்த வரிசையில் தற்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு குறித்து பொய்யான செய்தி வெளியிட்டதாக தற்போதும் அர்னாப் சர்ச்சையில் விழுந்திருக்கிறார். இந்த புதிய வழக்கில் ரிபப்ளிக் டிவியின் சீஃப் எடிட்டர் அர்னாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் கன்னட டிவியின் ஆசிரியர் நிரஞ்சன் ஆகியோர் மீது பெங்களூருவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பிராந்திய தலைவர்களில் ஒருவரான ரவீந்திரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு எஸ்ஜே பார்க் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்வர் சித்தராமையா பெங்களூரில் இல்லாதபோது, அங்கே அவரை முன்வைத்து ’ரிபப்ளிக் கன்னடா’ தொலைக்காட்சியில் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டதாக புகார் செய்யப்பட்டுள்ளது.

அர்னாப் - சித்தராமையா
அர்னாப் - சித்தராமையா

நேற்றைய தினம் ’ரிபப்ளிக் கன்னடா’ சேனலில் வெளியான காட்சித் தொகுப்பு ஒன்று, சித்தராமையாவின் வாகனம் செல்வதற்காக எம்ஜி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாக ஒரு செய்தியை சித்தரித்தது. மேலும் அவ்வாறு போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் அவசரமாக விரைய வேண்டிய ஆம்புலன்ஸ் ஒன்று முன்னேற இயலாது முடக்கப்பட்டதாகவும் அந்த செய்தி தெரிவித்தது.

இது தொடர்பான காட்சிகள் பதிவான நேரத்தில் முதல்வர் ​​சித்தராமையா அலுவலின் பொருட்டு மைசூருவில் இருந்ததாகவும், பெங்களூரில் அவர் அப்போது இல்லை என்றும் ரவீந்திரா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியானது மக்களவை தேர்தல் நேரத்தில் பொதுமக்கள் மத்தியில் முதல்வர் சித்தராமையாவுக்கு அவப்பெயர் தரும் நோக்கத்தில் அர்னாப்பின் செய்தி சேனலில் ஒளிபரப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in