குழந்தைகளிடம் தகாத உறவு: அமெரிக்க வாலிபருக்கு 690 ஆண்டுகள் சிறைத் தண்டனை

மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி
மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி

அமெரிக்காவில் குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பில் இருந்தவர், சிறு குழந்தைகளிடம் தகாத முறையில்  நடந்து கொண்டதால்  அவருக்கு 690 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கோஸ்டா மேஸா என்ற பகுதியை சேர்ந்தவர் மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி. இவர்  குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பணியை செய்து வருகிறார். நல்லதொரு குழந்தை பராமரிப்பாளர் என்று தன்னை விளம்பரப்படுத்திக் கொண்ட மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி அமெரிக்க பெற்றோர்களால் விரும்பப்படும்  நபராக உருவெடுத்தார்.

இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் லகுனா பீச் பகுதியை சேர்ந்த பெற்றோர் ஒருவரின் குழந்தையை பராமரிக்கும் பணியை செய்துள்ளார். அப்போது மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி தங்கள் குழந்தையை தகாத உறவில் ஈடுபட வைக்க முயன்றதாக குழந்தையின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து விசாரணையை தொடங்கிய போலீஸார், மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி இதற்கு முன் பணியாற்றிய அனைவரிடமும் விசாரணையை மேற்கொண்டபோதுதான் லாஸ் ஏஞ்சலில் மற்றொரு 7 வயது சிறுவனிடமும், தெற்கு கலிபோர்னியாவில் 10க்கும் மேற்பட்ட குழந்தைகளிடமும் இது போன்ற குற்றத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் 2014 முதல் 2019 வரை மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கி மொத்தம் 16 குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. சாட்சியங்கள் மற்றும் புகார்கள்  அடிப்படையில் மேத்யூ ஜாக்ர்ஜெவ்ஸ்கின் குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து  அவருக்கு குறைந்தபட்சமாக அவருக்கு 690 ஆண்டுகள்  சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!

ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி

40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!

அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!

சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in