முதியவர்  சுப்பிரமணி உயிரிழப்பு
முதியவர் சுப்பிரமணி உயிரிழப்பு

சென்னையில் அதிர்ச்சி: பிளாட்பாரத்தில் தூங்கிய முதியவர் மீது லாரி ஏறி உயிரிழப்பு

சென்னையில் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் மீது லாரி ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி(65). இவருக்கு திருமணமாகி சுசிலா என்ற மனைவியும் செல்வம், காஞ்சனா என இரு பிள்ளைகள் உள்ளனர். இவரது குடும்பத்தினர் பெரும்பாக்கத்தில் வசித்து வரும் நிலையில் சுப்பிரமணி சென்னை மெமோரியல் ஹால்மின்ட் தெருவில் சாலையோரம் தங்கி செருப்பு தைக்கும் தொழில் செய்து வந்தார். நேற்று இரவு வழக்கம் போல் சுப்பிரமணி வேலை முடிந்து சாலையோரம் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் லாரி சரக்கு லாரி ஒன்று பிளாட்பாரத்தின் மீது ஏறி இறங்கியதில் சுப்பிரமணி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

முதியவர்  உயிரிழப்பு
முதியவர் உயிரிழப்பு

தகவல் அறிந்து அங்கு வந்த பூக்கடை போக்குவரத்து போலீஸார் சுப்பிரமணி உடலை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் லாரி ஓட்டுநர் முருகன்(40) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தூத்துக்குடி சேர்ந்த முருகன் கோயம்புத்தூரில் தங்கி தனியார் லாரி நிறுவனத்தின் வேலை பார்த்து வருவது தெரியவந்தது.

மேலும் நேற்று கோயம்புத்தூரில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் ஏற்றிக்கொண்டு சென்னை சென்னை மின்ட் தெருவில் உள்ள ஒரு கடைக்கு இறக்குவதற்காக வந்ததும் அப்போது மின்ட் தெரு அருகே வாகனத்தை திருப்பும் போது எதிர்பாராமல் பிளாட்பாரத்தில் தூங்கிக் கொண்டிருந்த சுப்பிரமணி மீது ஏறி விபத்து நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸார் லாரி ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in