பேனா பிடிக்க வேண்டிய கைகளில் கத்தி... 10-ம் வகுப்பு படிக்கும் 3 பேரை குத்திய 5 மாணவர்கள் கைது!

பேனா பிடிக்க வேண்டிய கைகளில் கத்தி... 10-ம் வகுப்பு படிக்கும் 3 பேரை குத்திய 5 மாணவர்கள் கைது!

தேர்வு அறைக்கு வெளியே பை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் மூன்று மாணவர்கள் கத்தியால் குத்தப்பட்டனர். இது தொடர்பாக பத்தாம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்களை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஷிவமோகா
ஷிவமோகா

கர்நாடகா மாநிலம், ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள ராகி குடா அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு நேற்று நடைபெற்றது. அப்போது தேர்வு எழுத வந்த மாணவர்கள் சிலருக்கு, தேர்வு அறைக்கு வெளியே பை வைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது தேர்வு மையத்திலேயே அவர்கள் மோதிக் கொண்டனர். அப்போது அங்கிருந்த தேர்வுமைய கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர்கள் சண்டை போட்ட மாணவர்களைக் கண்டித்து தேர்வு எழுத அனுமதித்துள்ளனர்.

இதன்பின் தேர்வு முடிந்து வீட்டுக்கு மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ராகி குடா அருகே மூன்று மாணவர்களை வழிமறித்து மற்றொரு மாணவர் கும்பல் கத்தியால் குத்தி விட்டுத் தப்பிச்சென்றது. இதனால் காயமடைந்த மாணவர்கள், இதுகுறித்து ஜே.பி.நகர் காவல் நிலயைத்தில் புகார் செய்தனர்.

இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து செய்து விசாரணை நடத்தினர். மூன்று மாணவர்களைக் கத்தியால் குத்தியதாக ஐந்து மாணவர்களை இன்று கைது செய்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பேனா பிடிக்க வேண்டிய கைகளில் கத்திகளை வைத்துக் கொண்டலையும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in