கார் - லாரி நேருக்கு நேர் மோதல்... துடித்துப் பலியான 3 உயிர்கள்; 4 பேர் படுகாயம்

அசாம் விபத்தில் மூவர் பலி
அசாம் விபத்தில் மூவர் பலி

அசாமில் காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பலியானதோடு, 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

அசாமின் உடல்குரி மாவட்டத்தில் டின்சுக்கியாவிலிருந்து திமாகுட்சி நோக்கி கார் ஒன்றில் 6 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். சைக்கியா சுபுரி என்ற பகுதியின் அருகே வந்த போது, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்த கார், எதிரில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து
காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

மேலும் படுகாயமடைந்தவர்களில், லாரி ஓட்டுனர் மற்றும் காரில் பயணித்த 3 பேர் என 4 பேரை அருகில் இருந்தவர்கள் மீது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த போலீஸார், உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் காயமடைந்த 4 பேருக்கு தீவிர சிகிச்சை
விபத்தில் காயமடைந்த 4 பேருக்கு தீவிர சிகிச்சை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in