பரபரப்பு... கடல் வழியாக கடத்தல்... 25 கிலோ தங்கம், ரூ.2.30 கோடி பறிமுதல்!

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்.

தமிழகத்தில் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 25 கிலோ தங்கம் மற்றும் 2.30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடந்த 13-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் அருகே அதிகாரிகள் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது இரண்டு பேர் காரில் தங்கம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் காரில் இருந்து 11.794 கிலோ எடையுள்ள தங்கம், மற்றும் 2.30 கோடி ரூபாய் பணம், கடத்தலுக்குப் பயன் படுத்திய கார் ஆகியவற்றை வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து தங்கக் கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் சென்னை சவுகார்பேட்டை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ள தங்கம் உருக்கும் பட்டறை (புல்லியன்) ஒன்றில் நேற்று சோதனை நடத்தினர். அதில் 3.3 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் 54 லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இதேபோல் கடந்த 9-ம் தேதி திருச்சி சமயபுரம் சுங்கச்சாவடி அருகே சோதனை நடத்தி காரில் கடத்திவரப்பட்ட 7.55 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து இருவரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இலங்கையில் இருந்து கடல் வழியாக தங்கம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.

மேலும் அக்டோபர் 11-ம் தேதி சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் மலேசியாவில் இருந்து வந்த பயணிகள் இருவர் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பை, மற்றும் பேஸ்ட் வடிவத்தில் மறைத்து கடத்தி வந்த 3.46 கிலோ தங்கத்தை மீட்டனர். இவ்வாறு, கடந்த ஒரு வாரத்தில் டிஆர்ஐ சென்னை மண்டல அதிகாரிகள், பல்வேறு வழித்தடங்களில் சோதனை நடத்தி 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ கடத்தல் தங்கத்தை பறிமுதல்‌ செய்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் இருந்து தங்கம் கடத்தப்பட்டு இலங்கைக்கை கொண்டு வரப்படுவதாகவும், பின்னர் அங்கிருந்து கடல் மார்க்கமாக தமிழகத்திற்கு மீனவர்கள் படகு மூலம் தங்கம் கடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in