`47 வயதில் துணையை தேடுவது சரிப்படாது'- மறுமண செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை!

நடிகை பிரகதி
நடிகை பிரகதி

47 வயதில் தனக்கு மறுமணம் என வெளியான செய்திக்கு ‘அரண்மனைக்கிளி’ புகழ் நடிகை பிரகதி விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த நடிகை பிரகதி விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அரண்மனைக்கிளி’ சீரியலில் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் பாக்யராஜின் ’வீட்ல விசேஷங்க’ படத்தின் மூலம் அறிமுகமானார். இன்ஸ்டாவில் ரீல்ஸ்க்கு குத்தாட்டம் போடுவது, கிளாமராக புகைப்படங்கள் பகிர்வது என சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கிறார் பிரகதி.

தன்னுடைய 20வது வயதில் இவர் காதலித்துத் திருமணம் செய்தார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்தார். இப்போது வரை தன் மகன்களுடன் தனித்து வாழ்ந்து வரும் இவருக்கு இரண்டாவது திருமணம் என்ற பேச்சு எழுந்துள்ளது.

நடிகை பிரகதி
நடிகை பிரகதி

இதுகுறித்து பிரகதி தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். அவர் பேசியிருப்பதாவது, ”எனக்கு 47 வயதாகிவிட்டது. இப்போது மறுமணத்தை பற்றி என்னால் யோசித்து பார்க்க முடியவில்லை. இத்தனை ஆண்டுகள் தனிமையில் இருந்துவிட்டேன். இதற்கு மேல் ஒரு துணையை தேடுவது என்பது சரியாக இருக்காது. சில சிக்கல்கள் வரும்போது, நான் மிகவும் பிடிவாதமாக இருந்து சமாளித்து அதில் இருந்து மீண்டு இருக்கிறேன்” என கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in