பாலியல் புகாரில் சிக்கிய பிக் பாஸ் பிரபலம்; அதிரடியாக கைது செய்த போலீசார்

நடிகர் ஷியாஸ்
நடிகர் ஷியாஸ்

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிக் பாஸ் பிரபலம் விமான நிலையத்தில் காவல்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மலையாளத்தில் மோகன்லால் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் மாடலும் நடிகருமான ஷியாஸ் வைல்ட் கார்ட் போட்டியாளராக பங்கேற்று பிரபலமடைந்தார். ஷியாஸ் மீது கேரள மாநிலம் காசர்கோடில் உள்ள படன்னாவைச் சேர்ந்த 32 வயதான பெண் ஜிம் பயிற்சியாளர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்திருந்தார். அந்தப் புகாரில் ஷியாஸ் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தன்னிடம் இருந்து ரூ.11 லட்சம் மோசடி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக ஷியாஸ் தன்னுடன் உறவில் இருந்ததாக குறிப்பிட்டுள்ள அவர், கர்ப்பமான தன்னை ஷியாஸ் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளார். 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷியாஸ்...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷியாஸ்...

இதனிடையே ஷியாஸ் வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள இருப்பதாக வெளியான தகவலை அடுத்து ஷியாஸ் மீது அந்தப் பெண் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து, ஷியாஸ் கரீம் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டதால், வெளிநாட்டில் இருந்து சென்னை வந்த ஷியாஸ், சுங்கத்துறை அதிகாரிகளால் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். 

இதையடுத்து சென்னை சுங்கத்துறையினர் கேரளா போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் ஷியாஸை கைது செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in