லியோ படத்தில் சின்மயி... ட்வீட் பகிர்ந்து மகிழ்ச்சி!

பின்னணி பாடகி சின்மயி
பின்னணி பாடகி சின்மயி

'லியோ’ படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு நடிகை சின்மயி டப்பிங் பேசியுள்ளார்.

நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் டிரெய்லர் நேற்று மாலை வெளியானது. டிரெய்லர் வெளியாகி 16 மணி நேரம் ஆகும் நிலையில் 27 மில்லியன் வியூஸ்களைப் பெற்று டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. நேற்று காலை ’லியோ’ படத்தில் இருந்து நடிகை த்ரிஷாவின் போஸ்டரும் வெளியானது. இதில் ரத்தம் தெறிக்க, கண்கள் மிரள பயத்தில் த்ரிஷா இருப்பது போன்று போஸ்டர் இருந்தது.

சின்மயி ட்வீட்...
சின்மயி ட்வீட்...

மேலும், வெளியான டிரெய்லரிலும் த்ரிஷா விஜய்யிடம் பேசுவது போன்ற வசனங்களும் இடம் பெற்றிருந்தது. ‘லியோ’ படத்தில் நடிகை த்ரிஷாவுக்கு பாடகி சின்மயிதான் டப்பிங் பேசியுள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் அவர்தான் த்ரிஷாவுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார்.

இந்த விஷயத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜூ மற்றும் தயாரிப்பாளர் லலித்துக்கு நன்றி தெரிவித்துள்ளார். ‘96’ படத்திற்குப் பிறகு த்ரிஷாவுக்கு சின்மயி குரல் கொடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in