என் கணவருக்கு டஃப் கொடுக்கவே இந்த சீரியல்; நடிகை பிரியங்கா பேட்டி!

நடிகை பிரியங்கா
நடிகை பிரியங்கா

சீரியலுக்குள் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே தனது சுட்டித்தனமான நடிப்பாலும் அழகாலும் அனைவரையும் ஈர்த்தவர் நடிகை பிரியங்கா. ’ரோஜா’, ‘சீதாராமன்’ சீரியல்களில் நடித்த இவர், திருமணத்திற்காக சிறு இடைவெளி கொடுத்தார். தற்போது ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் ‘நள-தமயந்தி’ சீரியலில் மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

காலை முதல் மாலை வரை ஷூட்டிங் ஸ்பாட்டில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் பிரியங்காவை ஷூட் இடைவேளையில் சந்தித்தோம். உற்சாகம் குறையாமல் நம் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

’ரோஜா’, ‘சீதாராமன்’ என பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நீங்கள் திடீரென அந்த சீரியல்களை விட்டு விலகக் காரணம் என்ன?

நடிகை பிரியங்கா...
நடிகை பிரியங்கா...

என்னுடைய திருமண கதை உங்க எல்லோருக்கும் தெரியும்தானே? அதனால்தான் ஒரு குட்டி பிரேக் வந்துடுச்சு. கணவர், குடும்பத்துடன் கொஞ்ச நாட்கள் செலவிட வேண்டும் என நினைத்தேன். மலேசியா, சென்னை என மாறி மாறி வந்து கொண்டிருப்பது அப்போது சிரமமாக இருந்தது.

ஆனால், ஒரு ஆர்ட்டிஸ்டால் அதிக நாட்கள் வீட்டில் சும்மா இருக்க முடியாதுல்ல... அதுவும் நான் சிறுவயதில் இருந்தே, குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறேன். அதனால், என் கணவரே, “நீ திரும்பப் போய் நடி” என ஊக்கம் கொடுத்தார். என் ரசிகர்களும் என்னை மிஸ் செய்வதாக இன்ஸ்டாவில் சொல்லி இருந்தார்கள். அதனால், திரும்ப வந்தாச்சு!

'நள-தமயந்தி’ என்றால் எங்களுக்கு நிறைய கதைகள் எல்லாம் நியாபகம் வரும். உங்களுக்கு இந்தப் பெயருக்கான அர்த்தம் தெரியுமா?

நடிகை பிரியங்கா...
நடிகை பிரியங்கா...

அச்சச்சோ! எனக்கு சீரியல் கதைதான் தெரியுமே... இது சமையல் தொடர்பானது என்று கேள்விப்பட்ட நியாபகம். அதுதவிர, முன்பு ஒரு படம் வந்து ஹிட்டானது. இதுமட்டும்தான் தெரியும். சீக்கிரமே இந்தக் கதையை முழுதாகக் கேட்டு தெரிந்து கொள்கிறேன். எல்லோரும் கதைப் பிடித்துதான் நடிக்க வருவார்கள். ஆனால், இந்த சீரியலுக்குள் நான் கமிட் ஆக முக்கியக் காரணம் சமைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

என் கணவர் நன்றாக சமைப்பார். அவருக்கு டஃப் கொடுக்க வேண்டும் என்று நானும் நன்றாக சமைக்கப் போகிறேன். அதுவும் இல்லாமல், இந்த சீரியலில் டைட்டில் ரோல் எனக்குத்தான். எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்? ‘ரோஜா’, ‘சீதாராமன்’ இப்போது ‘நள-தமயந்தி’ என இந்த மூன்று சீரியல்களிலும் டைட்டில் ரோலில் நடித்திருப்பது என்னுடைய அதிர்ஷ்டம்.

நீங்களும் உங்கள் காதல் கணவரும் கோயிலில் திருமணம் செய்துகொண்டது அந்த சமயத்தில் சலசலப்பை ஏற்படுத்தியதே?

திருமணத்தின் போது...
திருமணத்தின் போது...

எல்லோர் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். குறிப்பாக, காதலில் கேட்கவே வேண்டாம். எல்லோருக்கும் வரும் பிரச்சினைகளைத்தான் நாங்களும் சந்தித்தோம். அதனால், அப்போது கோயிலில் திருமணம் செய்ய வேண்டியதாயிற்று. இப்போது எல்லாம் ஓகே ஆகியாச்சு. அந்த பிரச்சினைகளை எல்லாம் ஓரம் வைத்துவிட்டு இப்போது எங்கள் காதலில் மட்டும்தான் கவனம் செலுத்தி வருகிறோம்.

பிக் பாஸ் இந்த சீசனில் உங்களுடைய பெயரும் அடிபட்டதே... அது உண்மைதானா?

நடிகை பிரியங்கா...
நடிகை பிரியங்கா...

அது உண்மைதான்! இந்த சீசன் மட்டுமல்ல... கடந்த சீசனில் கூட கூப்பிட்டிருந்தார்கள். அப்போது ‘ரோஜா’ சீரியலில் நடித்துக் கொண்டிருந்ததால் மொத்தமாக 90 நாட்கள் கால்ஷீட் கொடுப்பது கஷ்டமாக இருந்தது. என்னால், அப்போது ‘ரோஜா’ சீரியலை விட்டுக்கொடுக்கவும் மனமில்லை. அடுத்தமுறை வாய்ப்பு வந்தபோது, ‘நள-தமயந்தி’ சீரியலில் கமிட் ஆகிவிட்டேன்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in