இந்தியா- பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைக் காணப் புறப்படும் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த்

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியைக் காண நடிகர் ரஜினிகாந்த் குஜராத் செல்கிறார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி நாளை மறுநாள் நடைபெறுகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் இந்தப் போட்டியைக் காண நடிகர் ரஜினிகாந்த் குஜராத் செல்கிறார்.

13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், இந்திய அணி அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் போட்டியில் விளையாடி அபார வெற்றி பெற்றது.

விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலின் அபார ஆட்டத்தால் இந்திய அணி அப்போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்து வெற்றியைப் பெற்றது. இதனையடுத்து ஆப்கானிஸ்தான் அணியுடன் டெல்லியில் விளையாடி 8விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அடுத்த போட்டியில் அக்டோபர் 14-ம் தேதி, அகமதாபாத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

இந்தியா vs பாகிஸ்தான்...
இந்தியா vs பாகிஸ்தான்...

இந்தப் போட்டியை நேரில் காண வருமாறு இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இப்போட்டியை நேரில் கண்டுகளிக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

’தலைவர் 170’ படப்பிடிப்பிற்காக நெல்லையில் பிஸியாக இருக்கும் ரஜினிகாந்த் இந்தப் போட்டிக்காக குஜராத் செல்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in