ரஜினியின் ‘முத்து’ ரீ-ரிலீஸ்; கவிதாலயா அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

முத்து திரைப்படத்தில் ரஜினி காந்த்
முத்து திரைப்படத்தில் ரஜினி காந்த்

ரஜினிகாந்தின் வெற்றித் திரைப்படங்களில் ஒன்றான ’முத்து’ இந்த நவம்பரில் வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா அறிவித்துள்ளது.

’ஜெயிலர்’ திரைப்பட வெற்றியை அடுத்து ரஜினிகாந்தின் கௌரவ தோற்றத்திலான, மகள் ஐஸ்வர்யா இயக்கிய ’லால்சலாம்’ திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து எதிர்பார்ப்புக்குரிய த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினியின் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த இடைவெளியில் ரஜினி ரசிகர்களை குஷிப்படுத்தும் அறிவிப்பு ஒன்றினை படத்தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா அறிவித்துள்ளது.

’முத்து’ ரஜினி - மீனா
’முத்து’ ரஜினி - மீனா

கே.பாலச்சந்தரின் கவிதாலயா தயாரிப்பில் 1995ல் வெளியான திரைப்படம் முத்து. ’தென்மாவின் கொம்புத்தேன்’ என்ற மலையாள திரைப்படத்தின் ரீமேக் இது. ஆனால் தமிழ் ரசனை மற்றும் ரஜினியின் மாஸ் ரசிகப் பரப்பு ஆகியவற்றை கணக்கிட்டு இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் ‘முத்து’ திரைப்படத்தை வடித்திருந்தார். பாசம், நேசம், சென்டிமென்ட், காமெடி, ஆக்‌ஷன் எல்லாம் சரிவிகிதத்தில் கலந்ததில் ரஜினியின் வெற்றித் திரைப்படங்களின் வரிசையில் முத்துவும் சேர்ந்தது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஹிட்டடித்தன. மீனா, சரத்பாபு, வடிவேலு என உடன் நடித்தவர்களும் பேசப்பட்டார்கள். ரஜினி மீதான அப்போதைய காலகட்ட அரசியல் எதிர்பார்ப்புகளையும் தூவியதில், முத்துவை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினார்கள். இந்த முத்து தற்போது ரீரிலீஸ் செய்யப்படுவதாக கவிதாலயா நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

‘வந்துட்டேன்னு சொல்லு; நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு’ என்ற ரஜினியின் பிரபல பஞ்ச் வசனத்தோடு, ரீ-ரிலீஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பதிவில் நவம்பர் வெளியீடும் என்றும், இணைக்கப்பட்ட வீடியோ துணுக்கில் டிசம்பர் 2023 என்று அறிவித்து குழப்பி இருக்கிறார்கள். இதனையொட்டி டிசம்பரில் ரஜினி பிறந்த நாளில் முத்து ரி-ரீலிஸ் வேண்டும் என ரஜினி ரசிகர்கள் கோரி வருகின்றனர். இந்த வரிசையில் அண்ணாமலை திரைப்படம் எப்போது ரிலீஸ் என்றும் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!

பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!

கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!

பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?

ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in