தனுஷ், இளையராஜா.
தனுஷ், இளையராஜா.

இளையராஜா பயோபிக்... நடிகர் தனுஷோடு இணையும் மாஸ் ஹீரோக்கள்!

இளையராஜா பயோபிக்கில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததுதான். இதில் தனுஷோடு மாஸ் ஹீரோக்கள் சிலரும் இணைய வாய்ப்பிருக்கிறது என்ற தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

தனுஷ், இளையராஜா
தனுஷ், இளையராஜா

”இளையராஜாவின் பயோபிக்கில் நடிக்க வேண்டும் என்பது என் வாழ்நாள் கனவு” எனச் சொல்லியிருந்தார் நடிகர் தனுஷ். அது தற்போது நிறைவேறியிருக்கிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவாக நடிகர் தனுஷ் நடிக்கிறார். இப்படத்திற்கு நடிகர் கமல்ஹாசன் திரைக்கதை எழுதுகிறார். இளையராஜாவின் பண்ணைப்புர ஆரம்ப வாழ்க்கையில் இருந்து சினிமாவில் வந்து அவர் சாதித்தது முதல் அவரது பயணம் படமாக இருக்கிறது.

அப்படி இருக்கையில், இதில் இளையராஜாவை மட்டுமே காண்பிக்க முடியாது. அவருடன் நிஜத்தில் பயணித்த பல முக்கிய ஆளுமைகளை திரையில் கொண்டு வர வேண்டும். அதில் ரஜினி, கமல் கதாபாத்திரத்தில் அவர்கள் இருவருமே திரையில் தோன்றுவார்கள் எனச் சொல்லப்படுகிறது.

இளையராஜா, கமல்ஹாசன்
இளையராஜா, கமல்ஹாசன்

அதே நேரத்தில், இளையராஜா வாழ்வில் தவிர்க்க முடியாத ஆளுமைகளாக இருக்கும் இயக்குநர் மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து ஆகியோரது கதாபாத்திரத்தில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இந்த படம் குறித்து அறிவிப்பு வந்தபோதிலே இணையத்தில் நெட்டிசன்கள் இவர்கள் கதாபாத்திரத்தில் யார், யார் நடித்தால் நன்றாக இருக்கும் என தங்கள் சாய்ஸை தெரிவித்தனர்.

அப்படி இருக்கும் போது, படத்தில் மணிரத்னம் கதாபாத்திரத்திற்காக நடிகர் மாதவன், வைரமுத்து கதாபாத்திரத்தில் விஷால் ஆகியோர் பரிசீலனைப் பட்டியலில் இருக்கிறார்களாம். ஆனால், நடிகர் தனுஷ் எடுக்கும் முடிவு தான் இறுதியாகும் என்கிறார்கள். இளையராஜா பயோபிக்கில் சாதனைகள் மட்டுமில்லாமல், சர்ச்சைகளையும் படமாக்குவார்களா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in