வெற்றியாளர்களின் கதைகள் மட்டுமே இங்கு படமாகும் என்பதில்லை. சர்ச்சைக்குரிய, தனிப்பட்ட வாழ்வில் சறுக்கிய பிரபலங்களின் கதைகளும் இங்கு படமாகி மக்களிடையே ஹிட்டடித்த வரலாறு உண்டு. அப்படி, பயோபிக்கான நடிகைகளின் கதைகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
1950களின் காலக்கட்டத்தில் ஹாலிவுட்டின் கனவு தேவதையாக வலம் வந்தவர் உலகப் புகழ்பெற்ற நடிகையும், பாடகியுமான மர்லின் மன்றோ. தனது இறுதி நாட்களில் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, குடும்பப் பிரச்சினைகளால் அவதியுற்றார். 36 வயதில் தற்கொலை செய்து கொண்டார். ஆனாலும், அவரது மரணம் இன்று வரை புதிராகவே இருந்து வருகிறது.
இவரது கதையை அடிப்படையாகக் கொண்டு ‘மை வீக் வித் மர்லின்’ என்ற திரைப்படம் 2011 ஆம் ஆண்டு சைமன் கர்டிஸ் இயக்கத்தில் வெளியானது. மைக்கேல் வில்லியம்ஸ் இதில் மன்றோவாக நடித்திருப்பார். இவரது சிறந்த நடிப்புக்காக பாராட்டுகள் பெற்றது மட்டுமில்லாமல் மைக்கேல் வில்லியம்ஸ் ஆஸ்கார் விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டார். அந்த நேரத்தில் ஒரு நேர்காணலில், படம் முடிந்த பின்னரும் அதன் தாக்கம் பல மாதங்கள் இருந்ததாகக் கூறினார்.
மக்கள் மத்தியில் புகழடைந்து தனிப்பட்ட வாழ்வில் மர்மமாக இறந்து போனவர்களில் நடிகை சிலுக்கும் ஒருவர். இவரது கதையை மையமாகக் கொண்டு வித்யா பாலன் நடிப்பில் ‘தி டர்ட்டி பிக்சர்’ திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியானது.
சிலுக்கு இருந்தால் படம் ஓடும் என அவரைக் கவர்ச்சி பதுமையாகவே திரையுலகம் அணுகியது சோகம். அவருக்குள் இருந்த சிறந்த நடிகை முழுமையாக வெளிவராமல் போனது காலத்தின் துரதிர்ஷ்டம். எந்தக் கவர்ச்சி அவரை உச்சத்தில் நிறுத்தி புகழைக் கொடுத்ததோ அதுவே அவருக்கு தனிப்பட்ட வாழ்வில் பல துன்பங்களையும் தந்தது.
’நடிகையர் திலகம்’ சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமாக தமிழ்- தெலுங்கில் வெளியானது ‘மகாநடி’.
நடிப்பாலும், அழகாலும் கொடி கட்டிப் பறந்த சாவித்ரி தனது குடிப்பழக்கத்தால் நோய்வாய்ப்பட்டு வாழ்வை முடித்துக் கொண்டார். சினிமாவில் தயாரிப்பாளராக பணத்தை இழந்தார். சுற்றி இருந்தவர்கள் ஏமாற்றினார்கள். இதனால், விரக்தியில் குடிக்க ஆரம்பித்தவருக்கு ஜெமினி கணேசனுடனான தனிப்பட்ட வாழ்க்கையும் சோதனையாக அமைந்தது.
ஓடிடி தளத்திற்காக தனது வாழ்க்கையை தானே இயக்குகிறார் நடிகை சோனா. ‘ஸ்மோக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த வெப்சீரிஸ் பல சீசன்களாக வெளியாக இருக்கிறது. ‘ஸ்மோக் சீசன் 1’ படப்பிடிப்பு நிறைவுறும் தருவாயில் இருக்கும் நிலையில் இதன் இயக்குனரான சோனா, இந்த வெப்சீரிஸில் தன்னுடைய சொந்த கதாபாத்திரத்தில் தானே நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார்.
”என்னுடைய கதையை சொல்வதால், கேட்கப்பட்ட கேள்விகள் அல்லது மறந்துபோன கேள்விகள், ஒளிந்துள்ள உண்மைகள் அல்லது சொல்லப்படாத உண்மைகள் குறித்து இயக்கியுள்ளதுடன் அதில் அனைத்திலும் ஒரு பாகமாகவும் இருந்தேன். என் வாழ்க்கைக்குள் வந்து என்னை பாருங்கள்” என்கிறார் சோனா.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!
கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!
இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!
’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!