இந்திய அளவில் டிரெண்டாகும் லோகி... காரணம் இதுதான்!

லோகி
லோகி

இந்திய அளவில் லோகி வெப்சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது.

மார்வெல் ஸ்டுடியோஸின் புகழ்பெற்ற வெப் சீரிஸ்களில் ஒன்று லோகி. நேரத்தை மையமாகக் கொண்ட இந்த சீரிஸ் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இதன் இரண்டாவது சீசன்தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் டிரெண்டிங்கில் உள்ளது. குறிப்பாக இந்த சீரிஸின் இரண்டாவது சீசனின் ஐந்தாவது எபிசோட் நேற்று ஒளிபரப்பாகி உள்ளது. இது பார்வையாளர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

லோகி
லோகி

பல திருப்பங்களுடன் உருவாகி இருக்கும் இந்தக் கதையில் நேரத்தை மாற்றி எழுதுவது குறித்தான பல சுவாரஸ்ய விஷயங்கள் இடம்பெற்றுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இரண்டாவது சீசனின் அடுத்த எபிசோடும் இன்று ஒளிபரப்பாகும் நிலையில் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் லோகியை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in