யூடியூபில் வெளியானது விஜயின் ‘லியோ’ சக்சஸ் மீட் வீடியோ... ரசிகர்கள் கொண்டாட்டம்

யூடியூபில் விஜயின் லியோ சக்சஸ் மீட் பேச்சு
யூடியூபில் விஜயின் லியோ சக்சஸ் மீட் பேச்சு

விஜயின் குட்டி ஸ்டோரி உட்பட லியோ சக்சஸ் மீட் நிகழ்வின் வீடியோ பதிவு யூடியூபில் வெளியாகி இருப்பதை சினிமா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மாஸ் ஹீரோக்களின் அடையாளமே மீண்டும் மீண்டும் திரையரங்கை மொய்க்கும் ரசிகர்களின் கூட்டம்தான்! அதற்கேற்ப காட்சிகளையும், இடைச்செருகலாய் பாடல்கள், சண்டைகளையும் படத்தில் வைத்திருப்பார்கள். ரிப்பீட்டட் ரசிகர்களை திருப்திபடுத்த அவை போதுமானதாக இருக்கும்.

அதுபோன்றே நடந்து முடிந்த லியோ சக்சஸ் மீட் நிகழ்வின் வீடியோ தொகுப்பு இன்று மாலை யூடியூபில் வெளியாக, தளபதி ரசிகர்கள் மட்டுமன்றி பலரும் அதனை கொண்டாடி வருகின்றனர். சன் டிவியின் யூடியூப் பக்கத்தில் வெளியான சில மணி நேரங்களில் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்திருக்கிறது இந்த வீடியோ.

வழக்கமான நன்றி நவிலல் மட்டும் குட்டி ஸ்டோடி மட்டுமின்றி, ரஜினியின் காக்கா - கழுகு கதைக்கு பதிலடி, ரசிகர்களின் அரசியல் ஆர்வத்துக்கு தூபம், லியோ பாடலுக்கு எழுந்த எதிர்ப்பு என நேரடியாகவும், மறைபொருளாகவும் நீண்ட விஜயின் உரை அவரது ரசிகர்களை மீண்டும் மகிழ்வித்திருக்கிறது.

அதிலும் டீகோடிங் முறையில் விஜயின் பேச்சிலிருந்து, அவர் சொல்லாத ஆனால் சொல்ல விரும்பிய கருத்து இதுதான் என்று பல பொழிப்புரைகளையும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பரப்பி வருகின்றனர். இதனூடே இடைவெளி விட்டிருந்த ரஜினி - விஜய் ரசிகர்களின் மோதல் மீண்டும் வெடித்திருக்கிறது. இத்துடன் இயக்குநர் லோகேஷ் மற்றும் த்ரிஷாவின் வீடியோக்களும் தனியாக வெளியாகி விஜய் ரசிகர்களை மகிழ்வித்துள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in