ரசிகர்கள் அதிர்ச்சி... 'லியோ' படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதியளிக்க நீதிமன்றம் மறுப்பு!

லியோ படத்தில் விஜய்
லியோ படத்தில் விஜய்

'லியோ' படத்தின் சிறப்புக் காட்சிகள் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் அதிகாலை காட்சிகள் குறித்து அரசே முடிவெடுக்க கருத்து தெரிவித்து, 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளது. முன்னதாக ஒருநாளுக்கு ஐந்து காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

’லியோ’ படக்குழு தரப்பிலிருந்து 'அக்டோபர் 19-ம் தேதி அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கும், 20-ம் தேதியில் இருந்து 24-ம் தேதி வரை காலை 7 மணிக்கும் சிறப்புக் காட்சிகள் ஒளிபரப்பு செய்ய வேண்டும்' என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அனைத்து திரையரங்குகளிலும் ஒரே ஒரு சிறப்புக் காட்சி மட்டுமே திரையிட வேண்டும் என்ற உத்தரவின்படி காலை 9 மணி முதல் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசின் இந்த அறிவிப்பில் அதிருப்தியடைந்த ‘லியோ’ படத்தின் தயாரிப்பாளர், இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க கோரியிருந்தார். இந்த வழக்கை அவசர வழக்காகக் கருதி இன்று காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அ[[ப்ப்ட்ஜி. 'லியோ' படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது என்று கூறிய நீதிபதி, காலை 9 மணி காட்சிக்கு பதிலாக காலை 7 மணி முதல் அனுமதி கோரி தமிழக அரசிடம் விண்ணப்பிக்க பட தயாரிப்பு நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் அனுமதியளித்தது. அதே சமயம், தயாரிப்பு நிறுவன கோரிக்கையை பரிசீலித்து நாளை மதியத்துக்குள் உத்தரவு பிறப்பிக்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in