`லியோ’ வெற்றி விழா நிகழ்ச்சிக்கு கட்டுப்பாட்டுடன் அனுமதி... என்ன தெரியுமா?

லியோ படத்தில் விஜய்
லியோ படத்தில் விஜய்

'லியோ’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு அனுமதி கிடைத்துள்ள நிலையில் என்னென்ன கட்டுப்பாடுகள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது. படம் வெளியாவதற்கு முன்பும் பின்பும் பல சர்ச்சைகள் எழுந்தது. படத்தின் இரண்டாம் பாதிக்குக் கிடைத்த கலவையான விமர்சனத்தையும் லோகேஷ் கனகராஜ் ஏற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், ‘லியோ’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நாளை மறுநாள் அதாவது நவம்பர் ஒன்றாம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற இருக்கிறது. இங்கேதான் முன்பு இசை வெளியீட்டு விழா நடத்தத் திட்டமிட்டு பின்பு ரத்தானது. ரத்தான இடத்திலேயே மீண்டும் படத்தின் வெற்றி விழா நடக்கிறது என ரசிகர்கள் உற்சாகமாக இந்த செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.

’லியோ’ திரைப்படத்தில் நடிகர் விஜய்
’லியோ’ திரைப்படத்தில் நடிகர் விஜய்

தற்போது, ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவிற்கு என்னென்ன கட்டுப்பாடுகள் என்பது குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், 200-300 கார்களுக்கும், அரங்கில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரசிகர்களுக்கு அனுமதியும் வழங்கியுள்ளது காவல்துறை.

‘லியோ’
‘லியோ’

மேலும், பேருந்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இதேபோன்று கட்டுப்பாடுகளோடு நடிகர் கார்த்தியின் ‘ஜப்பான்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்திலும், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசை நிகழ்ச்சியும் நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in