'லியோ' பட சிறப்பு காட்சி விவகாரம்... இன்று 4 மணிக்கு அரசு ஆலோசனை!

'லியோ' படத்தில் விஜய்
'லியோ' படத்தில் விஜய்

நடிகர் விஜய் நடித்த 'லியோ' படத்தின் சிறப்பு காட்சி வெளியிடுவது தொடர்பாக இன்று மாலை 4 மணியளவில் தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய், லோகேஷ் கனகராஜ்
விஜய், லோகேஷ் கனகராஜ்

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் ‘லியோ’. இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், பிரியா ஆனந்த், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிக்கிறது. வரும் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

இதனையொட்டி வருகிற 19-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை காலை 9 மணி முதல் இரவு 1:30 மணி வரை ஐந்து காட்சிகள் திரையிட தமிழ்நாடு அரசு அனுமதியளித்தது. இந்நிலையில், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் எனவும், காலை 9 மணி என்பதற்கு பதில் 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரி லியோ பட தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அப்போது, 'லியோ' படத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அக்டோபர் 19-ம் தேதி 2 சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பித்ததாகவும், ஆனால் ஒரு சிறப்புக் காட்சிக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கூடுதல் காட்சிகள் திரையிடுவதை ஒழுங்குபடுத்தக் கோரி மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு சென்னையில் தலைமை நீதிபதி அமர்விற்கு மாற்றப்பட்டுள்ளதால், இந்த வழக்கையும் அந்த பொதுநல வழக்குடன் இணைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்.
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்.

இதனை ஏற்ற நீதிபதி, மதுரை கிளை உத்தரவை பார்த்துவிட்டு, இந்த வழக்கை செவ்வாய்கிழமை முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்தார். அதன்படி இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், லியோ திரைப்படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்தார்.

மேலும் 'லியோ' திரைப்பட காட்சிகள் அனுமதி தொடர்பாக அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஏன் வழக்கு தொடரவில்லை என கேள்வி எழுப்பினார். இவ்வழக்கில் தமிழக அரசே முடிவு செய்யும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது. இந்த நிலையில் படக்குழுவினர், தியேட்டர் உரிமையாளர்களுடன் இன்று மாலை 4 மணியளவில் தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழப்பு!

சோகம்... படகு கவிழ்ந்து விபத்து.. பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு... 167 பேர் மாயம்!

அதிர்ச்சி... குளிக்க வைத்திருந்த வெந்நீர் கொட்டி 4 வயது குழந்தை மரணம்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம்... போரின் உக்கிரம் குறையுமா?

என்னைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்...மருமகள் கொடுமையால் கலெக்டரிடம் மூதாட்டி கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in