அதிர்ச்சி... கட்டுப்பாட்டை இழந்த ட்ரோன்... பிரபல நடிகர் படுகாயம்!
ஆக்ஷன் காட்சிகளைப் படமாக்கியபோது பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சுவிற்கு விபத்து ஏற்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தெலுங்கில், ‘ஜின்னா’, ‘டைனமைட்’ போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஷ்ணு மஞ்சு. நாற்பது வயதான விஷ்ணு மஞ்சு படங்களில் நடிப்பது மட்டுமல்லாது தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். தற்போது இவர் ‘கண்ணப்பா’ என்ற பான் இந்திய படத்தில் நடித்து வருகிறார். இதற்கான படப்பிடிப்பு நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், நேற்றும் படத்தின் முக்கியமானதொரு ஆக்ஷன் காட்சி படமாக்கப்பட்டது. இந்த சண்டைக் காட்சிகளை பிரம்மாண்டமாகக் காட்டுவதற்காக ட்ரோன் மூலம் படமாக்கியுள்ளனர். இதுதான் தற்போது விபத்துக்குக் காரணமாகியுள்ளது.
ட்ரோனின் பிளேடுகள் அவரது கையில் உராய்ந்து ஆழமாக கிழித்து காயம் ஏற்படுத்தியுள்ளது. சிக்னல் பிரச்சினைகள் காரணமாக டிரோன் ஆபரேட்டர் கட்டுப்பாட்டை இழந்து விட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் ‘கண்ணப்பா’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
விஷ்ணு மஞ்சுவின் கையில் பல காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் சிறிது காலம் அவர் முழுமையான ஓய்வில் இருந்த பின்பே படப்பிடிப்புக்குத் திரும்புவார் எனவும் தெரிகிறது. இந்த ‘கண்ணப்பா’ படத்தில் நடிகர் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
என் சாவுக்கு எம்எல்ஏ தான் காரணம்... கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்த வாலிபர்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.... வானிலை மையம் அறிவிப்பு
நாளை கடைசி தேதி.... 2250 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
அப்பாடா.... குறைந்தது தங்கத்தின் விலை... நகைப்பிரியர்கள் ஆறுதல்!
சோகம்... ஆந்திரா ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு....18 ரயில்கள் ரத்து