இயக்குநர் ஷங்கர் மகளுக்கு இரண்டாவது திருமணம்... முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு!

முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த இயக்குநர் ஷங்கர்.
முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த இயக்குநர் ஷங்கர்.

மூத்த மகள் ஐஸ்வர்யா திருமணத்திற்காக முதல்வர் ஸ்டாலினை மனைவியுடன் நேரில் சந்தித்து இயக்குநர் ஷங்கர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா- தருண் கார்த்திகேயன்
ஐஸ்வர்யா- தருண் கார்த்திகேயன்

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், உதவி இயக்குநர் தருண் கார்த்திக் என்பவருக்கும் ஒரு மாதத்திற்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. இந்த ஜோடியின் திருமணம் விரைவில் நடக்க இருக்க உள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை தன் மனைவியுடன் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

ஐஸ்வர்யா ஷங்கருக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு கிரிக்கெட் வீரரான ரோஹித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கொரோனா சமயத்தில் நடந்த இந்தத் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட முக்கியமானவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ரோஹித்துக்கு திருமணம் செய்து வைத்த ஆறு மாதத்தில் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். அதுமட்டுமல்லாமல் ரோஹித் மீது பல குற்றச்சாட்டுகளும் எழுந்தது.

ஐஸ்வர்யா- ரோஹித்
ஐஸ்வர்யா- ரோஹித்

இதனால், ரோஹித்திடம் இருந்து விவாகரத்து பெற்றார் ஐஸ்வர்யா. இப்போது அவருக்கு இரண்டாவது திருமணம் நடைபெற உள்ளது. ஷங்கர் ‘இந்தியன்2’, ‘கேம் சேஞ்சர்ஸ்’ படங்களில் பிஸியாக உள்ளார்.

ராம் சரண் பிறந்தநாளை ஒட்டி ’கேம் சேஞ்சர்ஸ்’ படத்தில் இருந்து ‘ஜருகண்டி’ பாடல் நேற்று வெளியானது. அத்துடன் ‘இந்தியன்3’ படப்பிடிப்பிலும் மும்முரம் காட்டி வருகிறார் ஷங்கர்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in