நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்தும், அவருக்குப் பக்கபலமாக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் குறித்தும் இயக்குநர், எஸ்.ஏ. சந்திரசேகர் முதல் முறையாக மனம் திறந்திருக்கிறார். புஸ்ஸி ஆனந்துடன் இருப்பதால் விஜயின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற தனது அச்சத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார் எஸ்.ஏ.சி.
கடந்த பிப்ரவரியில் நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியை ஆரம்பித்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். விஜய் கட்சி ஆரம்பித்தது தொடங்கி கட்சியின் பெயரை பதிவு செய்வது, உறுப்பினர் சேர்க்கை என அடுத்தடுத்த நடவடிக்கைகளில் அவருக்குப் பக்கபலமாக இருக்கிறார் புஸ்ஸி ஆனந்த். புஸ்ஸி ஆனந்தால் தான் விஜய் தனது பெற்றோரை பகைத்ததாக ஒரு செய்தி முன்பு உலா வந்த நிலையில், கிட்டத்தட்ட அதை உறுதி செய்யும் விதமாக புஸ்ஸி ஆனந்த் மீதான தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சி.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர், “புஸ்ஸி ஆனந்த் மன்றத்துக்கு வந்தவுடன் வெளியில் இருக்கும் பெஞ்சில் அப்படியே சாய்ந்து படுத்துக்கொள்வார். இதை ஒரு ஆளை விட்டு போட்டோ எடுக்கச் சொல்லி அதை தன்னுடைய ஆன்லைன் குரூப்பில் பதிவிடுவார். அதில் விஜயும் இருக்கிறார். இந்தப் புகைப்படத்தை 50 பேரை ஷேர் செய்ய வைத்து, 100 பேரை லைக் செய்ய வைப்பார்.
விஜய் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து ‘நமக்காக உழைத்து இப்படி கீழே படுத்திருக்கிறாரே’ என்று பரிதாபப்பட்டு, ‘அண்ணே, இனிமே நீங்க என் ரூமை எடுத்துக்கோங்க’ என்று சொல்வார். ஒரு தேர்ந்த அரசியல்வாதி கூட புஸ்ஸி ஆனந்த் போல இப்படி செய்ய மாட்டார்.
இப்படியான நபருடன் சேர்ந்தால் விஜயின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என பயமாக இருக்கிறது. அவரது நீண்ட நாள் அரசியல் ஆசை இப்படி சிக்கலில் இருக்கிறேதே!” எனக் கூறியுள்ளார்.
சமீபத்தில், எஸ்.ஏ.சிக்கு உடல் நிலை சரியில்லாதபோது, விஜயுடன் புஸ்ஸி ஆனந்தும் சென்று எஸ்.ஏ.சியை சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!
முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!