பிரபுதேவா பட டைட்டிலை மக்களே வைக்கலாம்... இயக்குநர் அதிரடி அறிவிப்பு!

பிரபுதேவா
பிரபுதேவா

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் நடிகர் பிரபுதேவா நடித்து வரும் புதிய படத்திற்கான தலைப்பை மக்களே தெரிவிக்கலாம் என இயக்குநர் ஷக்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இயக்கம், நடனம் மட்டுமல்லாது முன்பை போலவே தற்போது நடிப்பிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் பிரபுதேவா. நடிகர் விஜயுடன் ‘தளபதி 68’ படத்தை கைவசம் வைத்திருப்பவர் இயக்குநர் ஷக்தி சிதம்பரத்துடன் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பிரபுதேவா, ஷக்தி சிதம்பரம்
பிரபுதேவா, ஷக்தி சிதம்பரம்

இதில் மடோனா செபாஸ்டின் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், யாஷிகா ஆனந்த், அபிராமி, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, ஒய்.ஜி.மகேந்திரன், ஜான் விஜய், ‘ஆடுகளம்’ நரேன், மதுசூதனராவ், ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர். அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைத்துள்ளார். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

நடிகை மடோனா செபாஸ்டின்
நடிகை மடோனா செபாஸ்டின்

படம்பற்றி ஷக்தி சிதம்பரம் கூறும்போது, “இந்தப் படத்தின் கதைக்காக இரண்டு வருடங்கள் எடுத்துக் கொண்டேன். கதையை கேட்டுவிட்டு பிரபுதேவா உடனே சம்மதம் சொன்னார். படத்தின் டைட்டிலை மக்களே வைக்கலாம் என முடிவு செய்துள்ளோம். அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in