CookuWithComali5: ஜட்ஜ் ரெடி...’குக் வித் கோமாளி5’ நிகழ்ச்சியின் கோமாளிகள் யார் யார் தெரியுமா?

CookuWithComali5: ஜட்ஜ் ரெடி...’குக் வித் கோமாளி5’ நிகழ்ச்சியின் கோமாளிகள் யார் யார் தெரியுமா?

’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்க இருக்கிறது. இதில் செஃப் தாமு மற்றும் மாதம்பட்டி ரங்கராஜ் இருவரும் நடுவர்களாகக் களமிறங்க இந்த சீசனின் கோமாளிகள் சிலரை அறிமுகப்படுத்தி புரோமோ வெளியிட்டுள்ளது விஜய் டிவி.

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் வரவேற்புப் பெற்ற சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியான ’குக் வித் கோமாளி’ சீசன் 5 இன்னும் சில வாரங்களில் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய ஹிட்டே சமையல் தெரியாத கோமாளிகளின் கலகலப்பூட்டும் தொல்லைகள்தான். சமையல் கொஞ்சம், சிரிப்பு நிறைய என்ற கான்செப்ட்தான் நான்கு சீசன்கள் கடந்து ஐந்தாவது சீசன் வரை வந்துள்ளது.

இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் சீசனில் இருந்து நான்காவது சீசன் வரைக்கும் வழக்கமான கோமாளிகள் தொடர்ந்து வந்தனர். இவர்களோடு புதிதாக சிலரும் கோமாளிகளாக இணைந்தனர். இதனால், ஒவ்வொரு சீசனிலும் கோமாளிகள் யார் என்பது குறித்தான புரோமோவை நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே தொலைக்காட்சி தரப்பு ஒளிபரப்பும்.

புகழ், ராமர்
புகழ், ராமர்

அந்த வகையில், இந்த சீசனில் சீனியர் கோமாளிகள் இருப்பதை உறுதி செய்துள்ள நிகழ்ச்சி தரப்பு அவர்களுக்கான கலகலப்பான புரோமோவை வெளியிட்டுள்ளது. கடந்த சீசனில் ’இனி கோமாளியாக வர மாட்டேன்’ என சபதம் செய்து வெளியேறிய மணிமேகலை இந்த சீசனில் ரக்‌ஷனுடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இவர்களுடன் சுனிதா, குரேஷியும் கோமாளிகளாக என்ட்ரி கொடுக்கிறார்கள்.

இவர்கள் மாஸாக விமானத்தில் இருந்து இறங்க, ‘ரெண்டு, மூனு சீசன் வர நமக்கே இப்படி வரவேற்பு என்றால், ஐந்து சீசனாக வர புகழுக்கு என்ன பண்ணப் போறாங்களோ!’ என இவர்கள் ஜெர்க் ஆகி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியே கட் செய்தால், இந்த நிகழ்ச்சியின் சீனியர் மோஸ்ட் கோமாளியான புகழ் பஞ்சர் ஒட்டிய சைக்கிளை கஷ்டப்பட்டு மிதித்துக் கொண்டு வருகிறார். நடிகர் ராமர் ’இனி கோமாளியாக தொடர்வேன்’ எனச் சொல்லி அவரிடம் லிஃப்ட் கேட்டு நிகழ்ச்சிக்கு வருகிறார் என கலகலப்பான இந்த புரோமோவை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த சீசனில் இவர்கள் தவிர கோமாளியாக புதிதாக யார் யார் எண்ட்ரி கொடுக்கப் போகிறார்கள் என்பது வரும் நாட்களில் தெரிய வரும்.

இதையும் வாசிக்கலாமே...  

இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in