HBD Kamalhassan: உதயநிதி, ஸ்ருதிஹாசன், வைரமுத்து வாழ்த்து!

கமல்ஹாசன், வைரமுத்து
கமல்ஹாசன், வைரமுத்து

நடிகர் கமல்ஹாசனின் 68வது பிறந்தநாளுக்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசனின் 68வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அரசியல் கட்சி சார்பாக பல நலத்திட்டங்களையும் அவர் செய்து வரும் நிலையில், தனிப்பட்ட முறையில் பிரபலங்களுக்கும் நண்பர்களுக்கும் பிறந்தநாள் பார்ட்டி கொடுத்துள்ளார் கமல். இதில் சூர்யா, அமீர்கான் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் தங்களது சமூகவலைதளப்பக்கத்தில் பிரபலங்களும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ‘திரையுலக கனவுகளோடு வருபவர்களுக்கு மட்டுமல்ல, எல்லாத் தரப்பினரையும் ரசிக்க செய்யும் உலக நாயகன் கமல்ஹாசன் சார் அவர்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால், ’கலைஞானி’ என்று போற்றப்பட்ட கமல் சார், இந்திய திரையுலகின் முக்கிய அடையாளம் என்பது நமக்கெல்லாம் பெருமை. கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக மட்டுமின்றி, அரசியல் - சமூகநீதி தளங்களிலும் அவரது பங்களிப்பு போற்றுதலுக்குரியவை’ எனக் கூறியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து, ‘நாம் வாழும் காலத்தின் கர்வ காரணங்களுள் ஒன்று கலைஞானி கமல்ஹாசன் இத்துணை நீண்ட திரைவாழ்வு அத்துணை பேர்க்கும் வாய்க்காது வாழ்வு கலை இரண்டிலும் பழையன கழித்துப் புதியன புகுத்தும் அந்தண மறவரவர் எல்லாம் பார்த்துவிட்ட கமலுக்கு இனி என்ன வேண்டும்? உடையாத உடல் வேண்டும்; சரியாத மனம் வேண்டும் வாய்த்திருக்க வாழ்த்துகிறேன்’ என வாழ்த்தியுள்ளார்.

கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன், கமலின் சிறுவயது புகைப்படம், தான் சிறுவயதில் கமலுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என பல தருணங்களை வீடியோவாக்கி அவருக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.

நடிகை குஷ்பு, கமலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுத்தப் புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக் கூறியுள்ளார்.

கமல் தனக்கு எப்போதும் இன்ஸ்பிரேஷன் எனக் கூறி ஹரிஷ் கல்யாண் தனது வாழ்த்துகளைக் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in