
பிக் பாஸ் இல்லத்திற்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் உள்ளே நுழையும் சின்னத்திரை பிரபலம் குறித்தானத் தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பிரதீப், ஜோவிகா, பவா செல்லதுரை, அனன்யா என 18 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். வழக்கமாக இரண்டு போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைவார்கள்.
முதல் வாரத்தில் மாடல் அனன்யா குறைந்த ஓட்டுகளின் அடிப்படையில் வெளியேறினார். அவர் வெளியேறிய அடுத்த நாள் பவா செல்லதுரை ‘இந்த வீட்டிற்குள் போட்டி என்பதையும் தாண்டி அதிக வன்மமும் இருக்கிறது’ என பிக் பாஸிடம் தெரிவித்து அவர் வெளியேறினார். இதனால், இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என பிக் பாஸ் குழு அறிவித்துள்ளது.
மேலும் சமூகவலைதளங்களிலும் பவா செல்லதுரை கதையைத் தவறாக சித்தரித்து பேசியதற்கு கமல் நோஸ் கட் கொடுத்தார். அதைப் பொறுக்க முடியாமல்தான் அவர் வெளியேறினார் எனவும் கூறி வருகின்றனர். இப்போது வெளியேறிய இரண்டு போட்டியாளர்களுக்கு பதில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக யார் வருவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ‘ராஜா ராணி’ சீரியலில் நடித்துப் பிரபலமன அர்ச்சனா பெயர் அடிபடுகிறது. இவரைத் தவிர இன்னும் சில போட்டியாளர்களது பெயரும் பரிசீலனையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு... முதல்வர் வீட்டின் மீது கல்வீச்சு!
வைரல் வீடியோ: நடுரோட்டில் டூவீலரில் காதலர்கள் சில்மிஷம்!
ஒரு நாள் பிரிட்டன் தூதரான சென்னை இளம்பெண்! குவியும் வாழ்த்துகள்!
உஷார்... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
அடி தூள்... பொன்னியின் செல்வனாக கலக்கும் அஜித்! ரசிகர்கள் கொண்டாட்டம்!