கேப்டனை எதிர்க்கும் விசித்ரா கேங்... பழிவாங்கும் மாயா... பரபரப்பாகும் பிக் பாஸ் இல்லம்!

விசித்ரா
விசித்ரா

பிக் பாஸ் இல்லத்தில் மாயாவின் கேப்டன்சியை விசித்ரா கேங் எதிர்த்து வரும்படியான புரோமோ வெளியாகியுள்ளது.

வைல்ட் கார்டு போட்டியாளர்கள் என்ட்ரி, பிரதீப்புக்கு ரெட் கார்டு என பிக் பாஸ் இல்லம் பரபரப்பாகவே போய்க் கொண்டிருக்கிறது. குறிப்பாக, பிரதீப்பை மாயா, பூர்ணிமா கேங்தான் திட்டமிட்டு வீட்டை விட்டு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றி விட்டார்கள் என விசித்ரா தொடர்ந்து அவர்களுடன் விவாதம் செய்து கொண்டே வருகிறார். இந்த நிலையில், இந்த வாரத்தின் கேப்டனாக மாயா தேர்வாகியுள்ளார்.

ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருப்பவர்களை பழிவாங்குவதற்காக நான் சில விஷயங்களை அப்படித்தான் செய்வேன் என மாயா வெளிப்படையாகவே சொல்கிறார். விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் என ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருப்பவர்கள் மாயாவின் கேப்டன்சியை எதிர்ப்பது மட்டுமல்லாமல், உங்கள் பிரச்சினையை அப்போதே வெளிப்படையாக பிரதீப்பிடம் பேசாமல் எல்லோரும் ஒன்று கூடி திட்டமிட்டு அவரை வெளியேற்றி உள்ளீர்கள் என தொடர்ந்து அவரை எதிர்த்து விவாதம் செய்கின்றனர்.

இதனால், கடுப்பான மாயா பிக் பாஸ் இல்லத்தில் இருப்பதால் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி ஸ்மால் பாஸ் இல்லத்தில் இருப்பவர்களை பழி வாங்குகிறார்.

மாயா, அர்ச்சனா
மாயா, அர்ச்சனா

மேலும், பிக் பாஸ் இல்லம் என்பதற்கு பதிலாக மாயா பாஸ் இல்லம் என பெயர் வைத்துவிடலாம். ரெட் கார்டு வாங்கி சென்ற பிரதீப்புக்கும் அவருக்கும் வித்தியாசமே இல்லை என திட்டுகிறார் அர்ச்சனா. மாயா கேப்டன்சி ஒருதலை பட்சமாக இருக்கிறது என பலரும் குற்றம்சாட்டி வரும் நிலையில், இதுகுறித்து கமல்ஹாசன் இந்த வாரம் விசாரிப்பார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in