துரத்தும் போட்டியாளர்கள்... பதறும் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள்... பரபரக்கும் பிக் பாஸ் புரோமோ!

சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படும் போட்டியாளர்கள்
சுமால் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்படும் போட்டியாளர்கள்

பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்த வைல்ட் கார்டு போட்டியாளர்களை கேப்டன் பூர்ணிமா சுமால் பாஸ் வீட்டிற்கு அனுப்பும்படியான புரோமோ இன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் வீட்டின் கேப்டன் பூர்ணிமா
பிக் பாஸ் வீட்டின் கேப்டன் பூர்ணிமா

பிக் பாஸ்7 தமிழில் நேற்று விஜே அர்ச்சனா, தினேஷ், கானா பாலா, ஆர்.ஜே. பிராவோ, அன்னலட்சுமி என ஐந்து பேர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே நுழைந்துள்ளனர். மேலும், யுகேந்திரன் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த ஐந்து வைல்ட் கார்டு போட்டியாளர்களையும் மற்ற ஹவுஸ் மேட்ஸ் வம்பிழுக்கத் தொடங்கிவிட்டனர்.

அந்த வகையில், இரண்டாவது முறையாகத் தொடர்ந்து கேப்டன் ஆகியுள்ள பூர்ணிமா பிக் பாஸ் வீட்டில் தான் நம்பாதவர்கள் என சில பேரைத் தேர்வு செய்கிறார். அதில் வைல்ட் கார்டு போட்டியாளர்களும் உள்ளனர். இவர்களை ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் அனுப்புகிறார். வேண்டுமென்றே செய்கிறீர்களா என அர்ச்சனா கேட்க, அதற்கு ஆமாம் என்றும் சொல்கிறார் பூர்ணிமா.

அதேபோல, தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் வந்த முதல் நாளே தினேஷ் கேப்டன் பூர்ணிமாவுடன் துணி காய வைப்பது தொடர்பாக சண்டை போடும்படியான புரோமோவும் ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சிக்கான ஆர்வத்தைக் கூட்டியுள்ளது. வைல்ட் கார்டு போட்டியாளர்களால் நிச்சயம் பிக் பாஸ் வரும் நாட்களில் சூடு பிடிக்கும் என கமென்ட் செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in