
ஜோவிகாவின் படிப்பு விஷயத்தைப் பற்றி விசித்ரா பேச ஜோவிகா கோபமடைந்துள்ளார்.
பிக் பாஸ் இல்லத்திற்குள் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகாவும் போட்டியாளர்களில் ஒருவராக நுழைந்திருக்கிறார். அவர் பிக் பாஸ் மேடை ஏறும் போதே படிப்பில் தனக்கு பெரிதாக ஆர்வம் இல்லை எனவும் ஒன்பதாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு நடிப்பில் டிப்ளமோ முடித்துள்ளதாகவும் கூறினார். இதே விஷயத்தை பிக் பாஸ் இல்லத்திற்குள் போட்டியாளர்களிடமும் கூறினார். அப்போது இடைமறித்த நடிகை விசித்ரா, குழந்தைகள் யாராக இருந்தாலும் பள்ளிப்படிப்பை முடிக்க வேண்டியது அவசியம் எனக் கூறினார்.
பின்பு அடுத்தடுத்து போட்டியாளர்கள் ஜோவிகாவுக்கு அறிவுரை கூற, இதைப் பற்றி பேச விருப்பமில்லை என ஜோவிகா மறுத்துவிட்டார். இப்போது இந்த விஷயம் மீண்டும் விவாதப் பொருளாகி இருக்கிறது. விசித்ரா மீண்டும் பள்ளிப்படிப்பை முடிக்க வேண்டியது அவசியம் எனக் கூற, அதை மறுக்கும் ஜோவிகா ஒருக்கட்டத்தில், ‘நான் பேசி முடித்ததும் நீங்கள் பேசுங்கள்’ என கோபமாக விசித்ராவைப் பார்த்து கத்துகிறார். ஹவுஸ்மேட்ஸ் பெரும்பாலும் ஜோவிகாவுக்கு ஆதரவு கொடுப்பதை தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் பார்க்க முடிகிறது.
இவ்வளவு நாள் அமைதியாக பேசி வந்த ஜோவிகா, தற்போது திடீரென கோபமாகி இருப்பதைப் பார்த்த ரசிகர்கள், ஜோவிகாவும் அடுத்த வனிதாவாகி விட்டார் எனத் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
மறக்காதீங்க... வங்கிகளில் ரூ.2000 மாற்ற நாளை கடைசி நாள்!
ஆர்பிஐ அதிரடி அறிவிப்பு; வங்கி வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி
40 தொகுதிகளிலும் தனித்து போட்டி... திமுகவுக்கு எதிராக களமிறங்கும் ஆசிரியர்கள் சங்கம்!
அரியாசனம் காத்திருக்கு வா தலைவா... பரபரப்பை கிளப்பிய விஜய் ரசிகர்கள்!
சக வீரர்கள் மீது திடீரென துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ அதிகாரி - ஜம்மு காஷ்மீரில் பதற்றம்!