ரத்தம் தெறிக்க... கண்கள் மிரள... வெளியானது லியோ த்ரிஷாவின் புதிய போஸ்டர்!

’லியோ’ படத்தில் இருந்து த்ரிஷாவின் புதிய போஸ்டர்
’லியோ’ படத்தில் இருந்து த்ரிஷாவின் புதிய போஸ்டர்

’லியோ’ படத்தில் இருந்து தற்போது வெளியாகியுள்ள நடிகை த்ரிஷாவின் புதிய போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியாக இருக்கிறது. படத்திற்கு யூ/ஏ சர்டிஃபிகேட் கிடைத்துள்ளது. படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே வன்முறையும் சண்டைக்காட்சிகளும் அதிகம் இருக்கும் என்பதை படம் தொடர்பான ஒவ்வொரு அறிவிப்பிலும் படக்குழு உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில், நேற்று வெளியானத் தணிக்கை சான்றிதழுக்கான போஸ்டர் கூட ரத்தம் தோய்ந்தது போல சிவப்பு நிறத்தில் இருந்தது.

’லியோ’ த்ரிஷா...
’லியோ’ த்ரிஷா...

இப்போது, படத்தில் இருந்து முதல் முறையாக நடிகை த்ரிஷாவின் போஸ்டரை படக்குழு டிரெய்லர் நாளான இன்று வெளியிட்டுள்ளது. வழக்கமாக, ஒரு படத்தின் கதாநாயகிக்கான போஸ்டர் வெளியிடும்போது ஒரு மகிழ்ச்சியான சூழலில்தான் பெரும்பாலும் படக்குழு அறிமுகப்படுத்தும். ஆனால், லோகேஷ் கனகராஜ் தனது ‘லியோ’ கதாநாயகியான த்ரிஷாவை ரத்தம் தெறிக்க, கண்கள் பயத்தில் மிரள, அதிர்ச்சியில் காஷ்மீரில் உறைந்து நிற்கும் த்ரிஷாவைதான் போஸ்டரில் அறிமுகப்படுத்தி உள்ளார்கள்.

இதனால், ‘லியோ’ படம் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடிகிறது எனவும், ‘கில்லி’ படத்தில் பார்த்த த்ரிஷா போல இருக்கிறார் எனவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in