அந்தக் காலக்கட்டம் எனக்கு கடினமானதாக அமைந்தது... முதல் முறையாக மனம் திறந்த சமந்தா!

சமந்தா
சமந்தா

சினிமாவுக்குள் நுழைவதற்கான ஆசையைத் தனக்குக் கொடுத்தது மாடலிங் துறைதான் எனச் சொல்லி தனக்கு அந்தக் காலக்கட்டம் கடினமான ஒன்றாக இருந்ததாக நடிகை சமந்தா மனம் திறந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

மையோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா அதற்கான சிகிச்சையில் தற்போது உள்ளார். இந்த சிகிச்சைக்காகவே ஆறு மாத கால அளவில் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்துள்ளார் சமந்தா. சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று ஹைதராபாத் திரும்பியவர் தற்போது பூடானில் நண்பர்களுடன் ரிலாக்ஸாக சுற்றுலா சென்றுள்ளார். இதுமட்டுமல்லாது, பல பிராண்டுகளுக்கும் இவர் மாடலிங் செய்து வருகிறார். இந்த நிலையில், மாடலிங் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா மனம் திறந்து பேசியுள்ளார்.

சமந்தா
சமந்தா

சமந்தா பேசியிருப்பதாவது, “நான் என் கல்லூரி காலகட்டத்தில் இருந்தே மாடலிங் செய்து வந்தாலும் படிப்பின் மீதும் தொடர்ந்து கவனம் செலுத்தினேன். படிக்கும் காலத்தில் நடிகையாக வேண்டும் என்கிற ஐடியாவே என்னிடம் இல்லை. மாடலிங் துறைக்குள் வந்த பின்னர் தான் நடிக்க வேண்டும் என்கிற எண்ணம் வந்தது. ஏனெனில் அது கடினமான காலமாக இருந்தது. தொடந்து படிக்க முடியவில்லை, வீட்டின் நிலைமையும் சரியில்லை. என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்தேன்.

சமந்தா
சமந்தா

மாடலிங்கில் நுழைந்த பின்னர் தான் ஒரு ஐடியா கிடைத்தது. நடிகையாக வேண்டும் என்பதை இலக்காகவும் வைத்திருந்தேன். மாடலிங் துறையில் நான் எதையும் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. அப்படி செய்திருந்தால் நான் பேரழிவை சந்தித்திருப்பேன். நான் மாடலிங்கை தொடங்கும் போது மோசமாக இருந்தேன். டிவியில் நான் நடித்த விளம்பரம் வந்தாலே ஓடிச் சென்று மாற்றிவிடும் அளவுக்கு கிரின்ச் மனநிலையில் தான் இருந்தேன்” என சமந்தா பேசியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in