பேட்மிண்டன் விளையாட்டில் பதக்கம் வென்ற பிரபல நடிகை... செம மாஸ்!

நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ்
Updated on
1 min read

நடிகை நிவேதா பெத்துராஜ் பேட்மிண்டன் விளையாட்டில் பதக்கம் வென்றுள்ளார். இந்தப் புகைப்படங்களை அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

’சங்கத்தமிழன்’, ‘ஒருநாள் கூத்து’, ‘திமிரு பிடிச்சவன்’, ‘பொன் மாணிக்கவேல்’ போன்றப் படங்களில் நடித்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். குறிப்பாக, ‘ஒருநாள் கூத்து’ படத்தில் ‘அடியே அழகே’ பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தார். 2015ம் ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ’மிஸ் இந்தியா அழகி’ பட்டத்தை வென்ற நிவேதா மாடலிங்கில் ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கிலும் ’அல வைகுண்டபுரம்’, ’ரெட்’, ’பாகல்’, ’விரட்டா பருவம்’, ’ப்ளடி மேரி’ போன்றப் படங்களில் நடித்திருக்கிறார். நடிப்பு, மாடலிங் மட்டுமல்லாது இவர் விளையாட்டிலும் அதிக ஆர்வம் கொண்டவர்.

ஸ்போர்ட்ஸ் கார்கள் மீது அதிக ஆர்வம் கொண்ட இவர் சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ’ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ் ரேஸிங் பயிற்சியில்’ கலந்து கொண்டு அசத்தினார். இந்நிலையில்தான் பேட்மிண்டன் போட்டியிலும் நிவேதா பெத்துராஜ் அசத்தியுள்ளார். டால்ஃபின் ஸ்போர்ஸ் மேனேஜ்மென்ட் நடத்திய இந்த பேட்மிண்டன் போட்டியில் மதுரை அணிக்காக இரட்டையர் பிரிவில் பங்கேற்ற நிவேதா பெத்துராஜ் அதில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கோப்பை மற்றும் பதக்கத்துடன் உள்ள புகைப்படங்களை வெளியிட்டு அவர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். நிவேதாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...


ராமர் கோயிலில் இன்று முதல் தரிசனம்... கட்டுக்கடங்காத கூட்டம்; ஆர்ப்பரிக்கும் பக்தர்கள்!

முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்... இன்று கூடுகிறது அமைச்சரவை... என்னென்ன முக்கிய முடிவுகள்?

நவீன நீர்வழித் திட்டத்தின் நாயகன்... காலமானார் ஏ.சி.காமராஜ்

விடிய விடிய நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; சிக்கிய சார்பதிவாளர்... கோவையில் பரபரப்பு!

சீனாவில் 7.2 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்... வீடுகள் சேதம்; ரயில் சேவை பாதிப்பு - டெல்லியிலும் நில அதிர்வு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in