கவின் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

திருமணத்தின் போது நடிகர் கவின்
திருமணத்தின் போது நடிகர் கவின்
Updated on
1 min read

நடிகை லாஸ்லியா கவினின் திருமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார்.

பிக் பாஸ் தமிழின் மூன்றாவது சீசனில் இலங்கை செய்தி வாசிப்பாளராக லாஸ்லியா கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவருக்கும் நடிகர் கவினுக்கும் காதல் மலர்ந்தது. ஆனால், அந்த வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு இருவரும் பிரேக் செய்து விட்டதாக கூறினர். தற்போது இருவரும் தங்களது சினிமா கரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் நடிகர் கவினுக்கு அவருடைய நீண்ட நாள் தோழி மோனிகாவுடன் திருமணம் நடந்தது.

கவின் & லாஸ்லியா
கவின் & லாஸ்லியா

இந்த நிலையில், கவின் திருமணம் குறித்து லாஸ்லியா முதல் முறையாக சமீபத்திய பேட்டியில் மனம் திறந்துள்ளார். அவர் , “கவின் திருமணம் செய்துகொண்டதை அறிந்து சந்தோஷப்பட்டேன். அவருடைய சினிமா பயணமும் பர்சனல் வாழ்க்கையும் சூப்பராக போய்ட்டு இருக்கு. அதனால் அவருக்காக நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன். நானும் நிச்சயம் காதல் திருமணம் தான் செய்துகொள்வேன்” என கூறியுள்ளார் .

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in