வரமா, சாபமா எனத் தெரியவில்லை... வருத்தத்தில் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷ்
Updated on
2 min read

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோவிற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு ஆறுதலாக குரல் கொடுத்து வரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷூம் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகை ராஷ்மிகாவின் முகத்தை வேறொரு பெண்ணின் வீடியோவில் டீப் ஃபேக் டெக்னாலஜி மூலம் மாற்றம் செய்து நேற்று முன்தினம் மர்மநபர்கள் வெளியிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக நடிகர்கள் அமிதாப் பச்சன், மிருணாள் தாக்கூர் உள்ளிட்டப் பலரும் இந்த வீடியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ
ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ

நடிகை ராஷ்மிகாவும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றியும் கூறினார். இது மட்டுமல்லாது நடிகை கத்ரீனாவும் இது போன்ற மார்ஃபிங் புகைப்பட சர்ச்சையில் சிக்கினார். இதுபோன்ற மார்ஃபிங் புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டால் 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் பதிவு
கீர்த்தி சுரேஷ் பதிவு

இந்த வீடியோவில் சம்பந்தப்பட்ட சாரா படேலும், ‘இந்த வீடியோவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை’ எனவும் விளக்கம் கொடுத்து வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இந்த டீப் ஃபேக் வீடியோ பயத்தைக் கொடுத்துள்ளது. இந்த வீடியோவை எடிட் செய்த நபர் அந்த நேரத்தைப் பயனுள்ளதாக மாற்றி இருக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி வரமா சாபமா எனத் தெரியவில்லை. நிச்சயம் இதை நாம் பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டுமே தவிர இப்படி அல்ல’ எனச் சொல்லி ராஷ்மிகாவுக்கு தனது ஆதரவைக் கொடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in