கங்கனா , ஷாருக்கான்
கங்கனா , ஷாருக்கான்

எந்தப் படமும் ஓடல... ஷாருக்கானுடன் தன்னை ஒப்பிட்ட கங்கனா!

கடந்த வருடம் வெளியான நடிகை கங்கனா ரனாவத்தின் படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக தோல்வியைத் தழுவின. இப்படி தனது படங்களின் தொடர் தோல்வி குறித்து மனம் திறந்திருக்கும் கங்கனா, ஷாருக்கானுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசி இருக்கிறார்.

கங்கனா ரானவத்
கங்கனா ரானவத்

'தேஜஸ்’, ‘தலைவி’, ‘சந்திரமுகி2’ என இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் கடந்த வருடம் நடிகை கங்கனா நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே அவ்வளவாக சோபிக்கவில்லை. இதனால், “கங்கனா ராசியில்லாத நடிகை, கதைகளை சரியாகத் தேர்வு செய்யத் தெரியவில்லை, பிஜேபிக்கு இவர் ஆதரவு தருவதாலேயே இப்படி படங்கள் தோல்வி அடைகிறது” என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தது.

இதற்கெல்லாம் பதில் தராமல் மெளனம் காத்த கங்கனா, இப்போது பேசியிருக்கிறார். கடந்த வருடம் ‘பதான்’ படம் வெளியாவதற்கு முன்பு நடிகர் ஷாருக்கானின் பல படங்கள் தோல்வியை சந்தித்தது. ‘பதான்’ வெற்றிக்குப் பிறகே ‘ஜவான்’, ‘டங்கி’ ஆகிய படங்கள் வரவேற்புப் பெற்றது.

கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்

இந்த விஷயத்தைக் குறிப்பிட்டு பிரபல ஆங்கில ஊடக பேட்டியில் பேசி இருக்கும் கங்கனா, “இந்தத் துறையில் பெரிய சூப்பர் ஸ்டார்கள் கூட வெற்றிகளை விட தோல்விகளைத் தான் அதிகம் பார்த்திருக்கிறார்கள். ஷாருக்கானுக்கு பத்து படங்கள் தோல்வி அடைந்தது. பின்பு, ‘பதான்’ வெற்றிக் கொடுத்தது. அதேபோல தான் எனக்கும் ஏழெட்டு படங்கள் தோல்விக்குப் பிறகு ‘குயின்’ படம் மூலம் வெற்றி கிடைத்தது. பின்பு மூன்று, நான்கு படங்கள் தோல்வி அடைந்து ‘மணிகர்னிகா’ மூலம் வெற்றி கிடைத்தது.

இப்படியான சூழலில்தான் நான் இருக்கிறேன். அடுத்து ‘எமெர்ஜென்சி’ வெளியாக இருக்கிறது. இந்தப் படம் நீங்கள் எதிர்பார்க்கும் அந்த பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியை எனக்குத் தரலாம். யாருக்குத் தெரியும்?” எனக் கூறியுள்ளார்.

அதேபோல, ”ஓடிடி எப்போதுமே ஸ்டார் நடிகர்களை உருவாக்காது” என்றும் சொல்லி இருக்கும் கங்கனா, தன்னையும் ஷாருக்கானையும் இந்தத் தலைமுறையின் கடைசி ஸ்டார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். சினிமாவை கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு இப்போது மக்களவை தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் கங்கனா பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...  


இன்று பரிசீலனை.. தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்!

கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்; பழசை மறக்காத ஜி.கே.வாசன்... பம்பரத்துக்கு ஓட்டு கேட்ட சி.வி.சண்முகம்!

முதல்ல எல்லா பூத்களுக்கும் ஏஜென்ட் போடமுடியுதானு பாருங்க?... பாஜகவை பங்கம் செய்த வேலுமணி!

அக்காவை தோற்கடித்து, தம்பியை வெற்றி பெற வைக்க வேண்டும்... அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு இப்படி ஒரு வேலை!

தேறுவாரா திருமா... சிதம்பரம் தொகுதி நிலவரம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in