'36 வயதினிலே’ பார்த்துவிட்டு பல பெண்கள் வேலைக்குப் போகிறார்கள்... நடிகை ஜோதிகா!

ஜோதிகா
ஜோதிகா

" '36 வயதினிலே’ படம் பார்த்துவிட்டு நிறைய பெண்கள் வேலைக்குப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இந்த விஷயம் மகிழ்ச்சி கொடுக்கிறது" என்றார் நடிகை ஜோதிகா. தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற நிகழ்வில் இதனைத் தெரிவித்துள்ளார் ஜோதிகா.

ஜோதிகா
ஜோதிகா

தமிழ்நாடு அரசின் சார்பில் கடந்த 2015-ம் ஆண்டிற்கான திரைப்படங்கள் மற்றும் சிறந்த திரைக்கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் ‘36 வயதினிலே’ படத்தில் நடித்ததற்காக நடிகை ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.

ஆரம்பகாலத்தில் பெரும்பாலும் கமர்ஷியல் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்த ஜோதிகா தனது திருமணம், குழந்தைப் பிறப்புக்கு பின்பு கம்பேக் கொடுத்த படம்தான் ‘36 வயதினிலே’.

’ஹவ் ஓல்ட் ஆர் யூ?’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்தான் இது. இந்தப் படத்தில் இருந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தவர் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஜோதிகா
ஜோதிகா

’36 வய்தினிலே’ படத்தில் நடித்ததற்காகதான் தமிழக அரசின் சிறந்த நடிகை விருது பெற்றுள்ளார் ஜோதிகா. விருது பெற்ற பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ ’36 வயதினிலே’ திரைப்படம் எனக்கு எப்போதுமே ஸ்பெஷல் படம்தான். அதற்கு எப்போது விருது கிடைத்தாலும் சந்தோஷப்படுவேன். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு நிறையப் பெண்கள் வேலைக்குப் போவதாக என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். அதேபோல, வீட்டுத்தோட்டப் பராமரிப்பிலும் ஈடுபட்டிருக்கிறோம் என்று அவர்கள் சொன்னதக் கேட்டபோது அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் தொடர்ந்து நடிப்பேன்” என்றார் பெருமிதத்துடன்.

இதையும் வாசிக்கலாமே...

ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

ராணுவக் கல்லூரியில் படிக்க விருப்பமா?... மாணவர்கள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்!

பள்ளியில் பாடம் நடத்தும் ரோபோ ஆசிரியை... அசத்தும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு... குண்டு வைத்தவர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்?

அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கத் தயார்... டீல் பேசிய பாஜக: புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in