வைரல் வீடியோ: `தளபதி 68’ படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பினார் விஜய்!

சென்னை திரும்பிய நடிகர் விஜய்
சென்னை திரும்பிய நடிகர் விஜய்

நடிகர் விஜய் வெங்கட்பிரபு இயக்கத்தில் தான் நடித்து வரக்கூடிய ‘தளபதி 68’ படத்தின் படப்பிடிப்பை தாய்லாந்தில் முடித்துவிட்டு தற்போது சென்னை திரும்பியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

'லியோ’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடித்து வருகிறார். வெங்கட்பிரபு ஸ்டைலில் கலக்கலான ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது எனத் தகவல் வெளியான நிலையில், நடிகர் விஜய் ‘லியோ’ படத்தின் வெற்றி விழாவை முடித்துவிட்டு இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்காக தாய்லாந்து கிளம்பினார்.

தற்போது தாய்லாந்து ஷெட்யூல் முடிவடைந்துள்ள நிலையில், அங்கிருந்து நடிகர் விஜய் சென்னை திரும்பியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

'தளபதி 68’ படத்தில் நடிகர்கள் மோகன், ஜெயராம், சிநேகா, லைலா என 90’ஸ் நடிகர்கள் பலரும் ஒன்று சேர்ந்துள்ளதால் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும், இந்தப் படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் எனவும் சொல்லப்படுவதால் ரசிகர்கள் கூடுதல் உற்சாகத்தில் உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in