`லியோ’ வெற்றி விழாவை புறக்கணித்த அனிருத்; கடுப்பில் விஜய்?

விஜய்-அனிருத்
விஜய்-அனிருத்

இசையமைப்பாளர் அனிருத் ‘லியோ’ வெற்றி விழாவை புறக்கணித்ததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று முன்தினம் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார் என சொல்லப்பட்ட நிலையில், விஜய் மட்டுமே சிறப்பு விருந்தினர் என படக்குழு உறுதி செய்தது.

மேலும், ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன ‘காகம்-கழுகு’ குட்டிக்கதைக்கு நடிகர் விஜய், ‘ஆசைப்படுவதில் தவறில்லை. பெரிதாக ஆசைப்படலாம்’ எனச் சொல்லி பதிலடி கொடுத்ததோடு ‘ஒரே சூப்பர் ஸ்டார்தான்’ என அந்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

'லியோ’ பட விழாவில் நடிகர் விஜய்
'லியோ’ பட விழாவில் நடிகர் விஜய்

அதேபோல, ‘லியோ’ படத்தின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம் அனிருத்தின் இசை. அவரது இசையும் படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் டிரெண்டானது. ‘ஜெயிலர்’ பட வெற்றிவிழாவில் கூட ரஜினிகாந்த் அனிருத்தின் இசையால்தான் படம் தப்பித்தது என பேசியிருந்தார். இந்த நிலையில், ‘லியோ’ வெற்றி விழாவில் அனிருத் பங்கேற்கவில்லை.

விஜய்-அனிருத்
விஜய்-அனிருத்

இதற்குக் காரணம் அவரிடம் அடுத்தடுத்த பெரிய படங்கள் கைவசம் உள்ளது. இந்த பணிகள் காரணமாகவே அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது. இதனால், அனிருத் மீது விஜய் கடுப்பில் இருக்கிறார் எனத் தகவல் வெளியாக அதனை விஜய் தரப்பு மறுத்திருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in