திருமணம் நடக்கவில்லை, நிச்சயதார்த்தம் தான்... தெளிவுப்படுத்திய சித்தார்த்- அதிதி ஜோடி!

சித்தார்த்- அதிதி
சித்தார்த்- அதிதி

நடிகர் சித்தார்த்- அதிதி திருமணம் முடிந்து விட்டது என நேற்று செய்தி தீயாய் பரவிய நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறது இந்த ஜோடி. அதாவது, திருமணம் இல்லை, நிச்சயதார்த்தம்தான் முடித்தோம் என்று சமூக வலைதளத்தில் கூறியுள்ளனர்.

நடிகர் சித்தார்த் மற்றும் அதிதி இருவரும் நீண்ட நாட்களாகக் காதலித்து வந்த நிலையில் தெலங்கானாவில் இருவருக்கும் ரகசிய திருமணம் முடிந்துவிட்டதாக நேற்று செய்திகள் வெளியானது. தெலங்கானா மாநிலம், வனபர்த்தி மாவட்டத்தில் நடிகை அதிதி ராவ் குடும்பத்திற்குச் சொந்தமாக உள்ள ஸ்ரீரங்கநாயக சுவாமி கோயிலில், குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் இவர்கள் திருமணம் நடந்ததாக சொல்லப்பட்டது.

ஆனால், ‘எங்களுக்குத் திருமணம் முடியவில்லை. நிச்சயதார்த்தம்தான் முடிந்துள்ளது’ என புகைப்படம் பகிர்ந்து தற்போது தெளிவுப்படுத்தியுள்ளது இந்த ஜோடி.

சித்தார்த்- அதிதி
சித்தார்த்- அதிதி

நடிகர் சித்தார் அதிதியுடன் இருக்கும் செல்ஃபியைப் பகிர்ந்து, ‘அவள் எனக்கு சம்மதம் தெரிவித்தாள்! என்கேஜ்ட்!!’ எனக் கூறியுள்ளார். இதே பதிவை அதிதியும் பகிர்ந்துள்ளார். இருவரும் மோதிரம் மாற்றியுள்ளதை அந்தப் புகைப்படத்தில் காட்டியுள்ளனர்.

இந்த க்யூட் ஜோடியின் நிச்சயதார்த்ததிற்கு குஷ்பு, ராசி கண்ணா, கெளதம் கார்த்தி என பல பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...  

அதிர்ச்சி... போதையில் விமானம் ஓட்டும் பைலட்கள்... 6 மாதங்களில் 33 பைலட்கள் உட்பட130 பேருக்கு தண்டனை!

கூட்டமும் சேரவில்லை; கூட்டணியிலும் ஒற்றுமையில்லை... தேர்தல் பிரச்சாரத்தை பாதியில் நிறுத்திய ராதிகா!

இப்படியெல்லாமா விளையாடுறது?... குடல் வெடித்து வாலிபர் சாவு!

இப்படி ஆயிடுச்சே.. ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் ஓபிஎஸ்... 5 ஓபிஎஸ்-களின் வேட்பு மனுக்கள் ஏற்பு!

’பப்’பில் நைட் பார்ட்டி... ஸ்ருதிஹாசனுடன் செம ரொமான்ஸில் லோகேஷ்?! கதறும் கோலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in