தீர விசாரிப்பதே மெய்: கமலுக்கு எதிராக டிரெண்டாகும் பிரதீப்பின் ட்விட்!

கமல்ஹாசன், பிரதீப் ஆண்டனி
கமல்ஹாசன், பிரதீப் ஆண்டனி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி, கமல்ஹாசனுக்கு சொல்லியிருக்கும் பிறந்தநாள் வாழ்த்துதான் தற்போது சமூகவலைதளத்தில் டிரெண்டாகியுள்ளது.

பிக் பாஸ்7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் கமல்ஹாசன், பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றினார். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, தகாத வார்த்தைகள் பேசுகிறார் போன்ற காரணங்கள் அவர் வெளியேற்றத்திற்கு சொல்லப்பட்டது. இந்த நிலையில், பிரதீப்புக்கு ஆதரவாக நிறைய பேர் பேசியிருந்தார்கள்.

பிரதீப்பும் கமலை கடுப்பேற்றும் விதமாக தனது ரெட் கார்டை வைத்துக் கொண்டு குடுபத்துடன் கொண்டாடி புகைப்படங்களைப் பதிவேற்றினார். பிரதீப்புக்குப் பதிலாக நிக்சனுக்குதான் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் எனவும் பலரும் சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் பிரதீப் கமலுக்குப் பிறந்தநாள் வாழ்த்து சொல்லி ஒரு ட்விட் பகிர்ந்திருக்கிறார்.

அந்த ட்விட்டில், ‘சத்தியமா சொல்றேன் கமல் சார். உங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். 69வது பிறந்தநாளுக்கு வாழ்த்துகள். தமிழ் சினிமாவில் உங்களுடைய பங்களிப்பு பெரியது. லவ் யூ’ என்று சொல்லி ’நல்லாருங்க’, ‘தீர விசாரிப்பதே மெய்’ என்ற ஹேஷ்டேக்கைப் பகிர்ந்துள்ளார். இதுதான் இப்போது கமலுக்கு எதிராக திரும்பி ‘தீர விசாரிப்பதே மெய்’ என்பது ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in