இந்தியனுக்கு சாவே கிடையாது... மாஸாக வெளியான `இந்தியன்2’ படத்தின் கிளிம்ப்ஸ்!

’இந்தியன்2’ படத்தில் நடிகர் கமல்ஹாசன்
’இந்தியன்2’ படத்தில் நடிகர் கமல்ஹாசன்

நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன்2’ படத்தின் அறிமுக கிளிம்ப்ஸ் தற்போது வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ’இந்தியன்2’ படம் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது. அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. நவம்பர் 7ம் தேதி அன்று நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் வருகிறது. இதற்காக, இந்தப் படத்தில் இருந்து பல ஸ்பெஷல் விஷயங்களை ரசிகர்களுக்கு கொடுக்கத் தயாராகி விட்டது படக்குழு. முதலில் படத்தின் கிளிம்ப்ஸாக இந்தியன்2 அறிமுகம் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகி இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்திற்கான அறிமுக கிளிம்ப்ஸை தமிழில் கமலுடனான இத்தனை வருட நட்பிற்காக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டு இருக்கிறார். இந்தியாவில் பல துறைகளில் லஞ்சமும் ஊழலும் பெருகி இருக்கிறது. பல பணக்காரர்கள் அடிமட்ட மக்களை எப்படி சுரண்டுகிறார்கள் என்பதை இந்த காலநிகழ்வுகளோடு காட்டி இருக்கிறது ‘இந்தியன்2’. இதை எல்லாம் தட்டி கேட்க இந்தியன் தாத்தா திரும்ப வரவேண்டும் என்றும் கம்பேக் இந்தியன் என்ற ஹேஷ்டேக்கை இணையத்தில் டிரெண்ட் செய்கிறார்கள். ‘எங்கு தப்பு நடந்தாலும் அங்கு இந்தியன் வருவான். அவனுக்கு சாவே கிடையாது’ என கமல்ஹாசன் இந்த அறிமுக டீசரின் ஆரம்பத்தில் பேசுகிறார்.

’இந்தியன்2’
’இந்தியன்2’

ஷங்கர் இயக்கத்தின் பிரம்மாண்டம் டீசரில் ஒவ்வொரு பிரேமிலும் பளிச்சிடுகிறது. அனிருத் இசையில் நடிகர்கள் சித்தார்த், பாபி சிம்ஹா, பிரியா பவானி ஷங்கர், விவேக், மனோபாலா, எஸ்.ஜே.சூர்யா, ரகுல் என பலரும் நடித்துள்ளனர். இதில் கமலின் இந்தியன் தாத்தா தோற்றம் மட்டுமே காண்பிக்கப்பட்டுள்ளது.

திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதமும், இதன் மூன்றாம் பாகம் ‘இந்தியன்3’ அடுத்த வருடம் தீபாவளிக்கு வெளியிட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. படத்தின் மூன்றாவது பாகத்திற்காக நடிகர் கமல்ஹாசன் கூடுதலாக 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in