எலும்பு முறிந்து, தசை நார் கிழிந்து படுத்த படுக்கையான அதிர்ச்சி புகைப்படங்களை நடிகர் அருண்விஜய் வெளியிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அருண்விஜய் நடிப்பில் விஜய் இயக்கிய ‘மிஷன் சாப்டர்1’ திரைப்படம் வெளியானது. தந்தை மகளுக்கும் இடையே உள்ள பாசம் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்தப் படமாக இது இருந்தது. இந்தப் படத்தில் நடிகர்கள் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், அபிஹசன் உள்ளிட்டப் பலரும் நடித்திருந்தார்கள். படத்தின் நிகழ்ச்சிகளுக்கு கையில் ஏற்பட்ட எலும்பு முறிவுடனேயே அருண்விஜய் வந்திருந்தார். படத்திற்கான ஆக்ஷன் காட்சிகளில் நடித்த போது கடுமையான அடிபட்டது என்பதையும் அவர் பகிர்ந்திருந்தார்.
இதுபோன்ற சூழ்நிலையில்தான் அந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளுக்காக தான் பட்ட கஷ்டங்களை எல்லாம் புகைப்படங்களாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், ‘’மிஷன் சாப்டர்1’ படத்திற்கு நீங்கள் கொடுத்துள்ள இந்த வெற்றி நான் கடந்த இரண்டு மாதங்களாகப் பட்ட கஷ்டங்களை எல்லாம் மறக்கச் செய்திருக்கிறது. ஏகப்பட்ட எலும்பு முறிவு மற்றும் தசை நார்களை இது கிழியச் செய்திருக்கிறது. ஆனால், நீங்கள் கொடுத்த இந்த வெற்றி மீண்டும் அடுத்தடுத்தப் பயணங்களுக்கு என்னைத் தயார் செய்திருக்கிறது’ எனக் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
ராமர் கோயிலில் இன்று முதல் தரிசனம்... கட்டுக்கடங்காத கூட்டம்; ஆர்ப்பரிக்கும் பக்தர்கள்!
முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணம்... இன்று கூடுகிறது அமைச்சரவை... என்னென்ன முக்கிய முடிவுகள்?
நவீன நீர்வழித் திட்டத்தின் நாயகன்... காலமானார் ஏ.சி.காமராஜ்
விடிய விடிய நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; சிக்கிய சார்பதிவாளர்... கோவையில் பரபரப்பு!