பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்

 ‘777 சார்லி’ பட நாய்
‘777 சார்லி’ பட நாய்

பிக் பாஸ் வீட்டிற்குள் ‘777 சார்லி’ பட நாய் உள்ளே நுழைய இருப்பதை அதன் தொகுப்பாளர் உறுதி செய்துள்ளார்.

உலகெங்கிலும் புகழ்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளிலும் நடந்து வருகிறது. இதில் தமிழ், தெலுங்கில் ஏழாவது சீசன் தற்போது தொடங்கி இருக்கிறது. தமிழில் நடிகர் கமல்ஹாசனும், தெலுங்கில் நடிகர் நாகர்ஜூனாவும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

அதேபோல, கன்னடாவில் தற்போது நடந்து வரும் பத்தாவது சீசனை நடிகர் கிச்சா சுதீப் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த பிக் பாஸ் கன்னடத்தின் பத்தாவது சீசனில்தான் ‘777 சார்லி’ பட நாய் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கிறது என்ற அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

 ’777 சார்லி’
’777 சார்லி’

ரக்‌ஷித் ஷெட்டி நடித்து கன்னடம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான ’777 சார்லி’ திரைப்படத்தில் நடித்திருந்த நாய் ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தது. இந்த ஆண்டிற்கான சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் ’777 சார்லி’ திரைப்படம் வென்றது. இந்த நாய்தான் தற்போது பிக் பாஸ் கன்னடத்தில் போட்டியாளராக பங்கேற்க இருக்கிறது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்தார் நிகழ்ச்சித் தொகுப்பாளர் கிச்சா சுதீப்.

இதற்கு தேவையான அதிகாரப்பூர்வ வழிமுறைகளை எல்லாம் தாங்கள் பின்பற்றி ஒப்புதல் பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார். மேலும் சார்லியின் பயிற்சியாளர் பிரமோத் சில காலத்திற்கு பிக் பாஸ் வளாகத்தின் வெளியே இருக்கப்போவதாகவும் சொல்லப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொதுவாக போட்டியாளர்களுக்குள் சண்டை அதிகம் வரும். இதில் நாய் ஒன்று கலந்து கொண்டு என்ன செய்யப் போகிறது என ரசிகர்கள் ஆச்சரியத்துடன் எதிர்பார்த்து உள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in