அவரது பாணியில் ஹோலி... கலர்ஃபுல்லாக கொண்டாடிய குட்டி யானை; வைரலாகும் வீடியோ!

குட்டி யானை
குட்டி யானை

மனிதர்கள் ஹோலி பண்டிகை கொண்டாடுவதை பார்த்திருக்கிறோம். ஆனால், குட்டி யானை ஒன்று ஹோலி பண்டிகை கொண்டாடி இருக்கிறது. அது தொடர்பான வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுஷந்தா நந்தா தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஹோலி பண்டிகை
ஹோலி பண்டிகை

ஹோலி பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது வண்ணங்கள் தான். சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை ஒருவருக்கொருவர் வண்ணங்களை பூசிக்கொண்டு பண்டிகையை கொண்டாடி மகிழ்வர். வடமாநிலங்களில் பிரசித்தி பெற்ற விழாவாக இருந்த ஹோலி பண்டிகை, தற்போது தமிழகத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய வனத்துறை அதிகாரியான சுஷந்தா நந்தா பகிர்ந்த குட்டி யானை ஒன்றின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், அந்த குட்டி யானை மிகவும் மகிழ்ச்சியாக விளையாடும் காட்சிகள் உள்ளது. குறிப்பாக, அந்த யானை தரையில் இருக்கும் மண்ணை துதிக்கையால் அள்ளி தன் மீது வாரி இறைத்து விளையாடும் காட்சிகள் பயனர்களை ரசிக்க செய்கிறது. ‘அவரது பாணியில் ஹோலி கொண்டாட்டம்' என்ற தலைப்பில் சுஷந்தா நந்தா பகிர்ந்த இந்த வீடியோவை இணையவாசிகள் ரசித்து வருகின்றனர்.

குழந்தையாக இருக்கும்போது மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும் சுட்டித்தனம் செய்யும் என்பது இந்த குட்டி யானையே நிரூபித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

ராணுவக் கல்லூரியில் படிக்க விருப்பமா?... மாணவர்கள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்!

பள்ளியில் பாடம் நடத்தும் ரோபோ ஆசிரியை... அசத்தும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு... குண்டு வைத்தவர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்?

அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கத் தயார்... டீல் பேசிய பாஜக: புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in