நியூசிலாந்து - இங்கிலாந்து கிரிக்கெட் 
விளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட்- நியூசிலாந்து பந்துவீச்சில் திணறும் இங்கிலாந்து

காமதேனு

2023ம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதையடுத்து, களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 112 ரன் எடுத்திருந்தது. இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோ 33 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி சிறப்பாக பந்து வீசி இங்கிலாந்து வீரர்களை திணறடித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

SCROLL FOR NEXT