ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் 
விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட்: ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறும் ஆஸ்திரேலியா!

காமதேனு

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்களுடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கம் முதலே நிதானமாக ஆடிய ஆப்கானிஸ்தான் வீரர்கள், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்டு ரன் குவித்தனர்.

அந்த அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன் எடுத்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக இப்ராகிம் ஜர்தான் 129 ரன்னும், ரஷித் கான் 35 ரன்னும் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஜோஸ் ஹேசல்வுட் அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார்.

292 ரன் என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலியா களமிறங்கியது. ஆனால், ஆப்கானிஸ்தான் வீரர்கள் பந்துவீச்சை ஆஸ்திரேலியா சந்திக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட்டானார்கள். 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்களுடன் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...

HBD Kamalhassan: கமல்ஹாசன் வேண்டுகோளை நிராகரித்த ’சூப்பர் ஸ்டார்’!

இன்று 19 மாவட்டங்களில் கனமழை... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சத்தீஸ்கர் வாக்குப்பதிவில் பரபரப்பு... குண்டுவெடிப்பில்  பாதுகாப்பு படை வீரர் காயம்!

திமுகவுடன் கூட்டணியா? கமல் சொன்ன 'நச்' பதில்!

வீட்டை காலி செய்ய மிரட்டுகிறார்! நடிகர் பிரபுதேவா சகோதரர் மீது பரபரப்பு புகார்

SCROLL FOR NEXT