அரவிந்த் கேஜ்ரிவால் 
அரசியல்

முதல்வர் என்பதற்காக சிறப்பு சலுகை வழங்க முடியாது... கேஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

காமதேனு

தேர்தல் நேரத்தில் டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது சட்டவிரோதம் அல்ல எனக்கூறி, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு ஊழல் வழக்கு தொடர்பாக டெல்லி மாநில முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்தது. இதையடுத்து, அவர் நீதிமன்றம் உத்தரவுப்படி அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தவாரே அவர் முதலமைச்சர் பதவிகளை கவனித்து வருகிறார். தன் மீதான அமலாக்கத்துறை விசாரணைக்கும், நீதிமன்ற விசாரணைக்கும் தடை விதிக்கக் கோரி அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

டெல்லி உயர்நீதிமன்றம்

அப்போது, கேஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார். தேர்தல் காலத்தில், அவரை பிரச்சாரத்திற்கு செல்ல விடக்கூடாது என்பதற்காக அமலாக்கத்துறை கேஜ்ரிவாலை கைது செய்துள்ளதாக அவர் வாதிட்டார். இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், டெல்லி மதுபானக் கொள்கை முறைகேட்டில் கேஜ்ரிவாலே நேரடியாக ஈடுபட்டுள்ளதற்கான ஆதாரங்கள் இருப்பதாக வாதிட்டார்.

அமலாக்கத்துறை

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கேஜ்ரிவாலின் மனுவை தள்ளுபடி செய்வதாக கூறி உத்தரவிட்டார். அப்போது அவர் பல்வேறு கருத்துக்களையும் முன்வைத்தார். “முதலமைச்சர் என்பதற்காக எந்த சிறப்பு சலுகையும் வழங்க முடியாது. பொதுவாழ்வில் உள்ளவர்கள் சலுகைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும். கேஜ்ரிவால் கைது சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதே தவிர, தேர்தலின் போது எடுக்கப்பட்ட முடிவு அல்ல. தேர்தல் நேரம் என்பதால் விசாரணைக்கு வர முடியாது என கெஜ்ரிவால் கூறியதை ஏற்க முடியாது. மற்றவர்களுடன் இணைந்து முறைகேட்டில் கேஜ்ரிவாலும் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை காண முடிகிறது.” என்றார்.

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்

மேலும்,”நீதிபதிகள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்கள். அவர்கள் அரசியல் கருத்துகளுக்கு அப்பாற்பட்டவர்கள். நீதிமன்றங்கள் அரசியலுக்குள் செல்ல முடியாது. அரசியல் செயல்பாடுகள் நீதிமன்றத்தின் முன் செல்லாது. இந்த வழக்கு கேஜ்ரிவால் மற்றும் மத்திய அரசுக்கு இடையேயான பிரச்சனை அல்ல. இது அமலாக்கத்துறை, கேஜ்ரிவால் இடையேயான சட்ட விவகாரம். கீழமை நீதிமன்றத்தின் விசாரணையில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது.” என்றார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கேஜ்ரிவால் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வருவார் என அக்கட்சியினர் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். இந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்து கேஜ்ரிவாலுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...   


முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் கவலைக்கிடம்... மருத்துவமனையில் அனுமதி!

பகீர்... துப்பாக்கியுடன் முதல்வர் அருகே சென்று, மாலை அணிவித்த நபரால் பரபரப்பு!

நடிகர் அஜித்தின் காஸ்ட்லி கிஃப்ட்... ஆச்சரியத்தில் வில்லன் நடிகர்!

தேர்தல் திருவிழா.. பணம், நகை, மது, சேலை, லேப்டாப்... ரூ.71 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்!

அமீருக்கு அடுத்தடுத்து சிக்கல்... நேரில் ஆஜராக மீண்டும் சம்மன்

SCROLL FOR NEXT