ரேவந்த் ரெட்டி 
அரசியல்

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு; சட்டமன்றத்தில் தீர்மானம்... ரேவந்த் ரெட்டி அதிரடி!

காமதேனு

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதிக்கக் கோரிய தீர்மானம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா சட்டமன்ற கூட்டத்தொடரில், சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தை, மாநில பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் பூனம் பிரபாகர் இன்று தாக்கல் செய்தார்.

அமைச்சர் பூனம் பிரபாகர்

பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் கடந்தாண்டு வெளியிடப்பட்டது. இதன்பிறகு இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. பீகாரைத் தொடர்ந்து கர்நாடகா, ஒடிசா போன்ற மாநிலங்களும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி அதுகுறித்த விவரங்களை வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளன. தற்போது அனைத்து மாநிலங்களிலும் இந்த கணக்கெடுப்பை நடத்தவேண்டும் என்று கோரிக்கை குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல சமூகநிதியை பின்பற்றும் தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பாமக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை எழுப்பி வருகின்றன.

ராகுல் - ரேவந்த் ரெட்டி

இந்நிலையில், தெலங்கானா அரசு சாதிவாரி கணக்கெடுப்புக்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளது. அங்கு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று ராகுல்காந்தி வாக்குறுதி அளித்திருந்தார். இதை நிறைவேற்றும் விதமாக, கடந்த 4ம் தேதி முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, தெலங்கானா சட்டமன்ற கூட்டத்தொடரில், சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்தை, மாநில பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் பூனம் பிரபாகர் இன்று தாக்கல் செய்தார். இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தில் சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையிலான வேலைவாய்ப்பு, அரசியல் மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு வீடு வீடாக சென்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  

தேர்தல் அதிகாரியை தாக்கியதாக வழக்கு; மு.க.அழகிரி உள்ளிட்டோர் விடுதலை!

சிறுநீரில் இருந்து மின்சாரம்... மாத்தியோசித்த பாலக்காடு ஐஐடி மாணவர்கள்!

முன்னாள் பிரதமருக்கு திடீர் உடல் நலக்குறைவு... மருத்துவமனையில் அனுமதி!

கெட்டதிலும் ஒரு நல்லது... மகன் இறப்புக் குறித்து சூர்யாவிடம் உருகிய சைதை துரைசாமி!

விவசாயிகள் போராட்டத்தில் அதிர்ச்சி... மாரடைப்பால் ஒருவர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT