டெல்லி காற்று மாசு 
தேசம்

தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு... அதிகரிக்கும் காற்று மாசுவால் குழந்தைகள் கடும் அவதி!

காமதேனு

டெல்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக அங்கே தொடக்கப்பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த விடுமுறையை அரசாங்கம் மேலும் நீட்டித்துள்ளது.

டெல்லியில் காற்று மாசு அபாயகர அளவைத் தாண்டியுள்ளது. ஞாயிறு காலை நிலவரப்படி காற்று தரக்குறியீடு 460 புள்ளிகளை எட்டியது. தொடர்ந்து 6வது நாளாக அபாயகர அளவைத் தாண்டியிருக்கும் காற்று மாசு காரணமாக குழந்தைகள் மற்றும் வயதில் மூத்தோர் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து தொடக்கப்பள்ளிகளுக்கு நவ.5 வரை விடுமுறை அளித்து டெல்லி அரசு உத்தரவிட்டிருந்தது. அந்த விடுமுறை இன்றுடன் முடிவடைவதால், தொடக்கப்பள்ளிகளுக்கான விடுமுறையை நவ.10 வரை நீட்டித்து புதிய உத்தரவு வெளியாகி உள்ளது.

6 முதல் 12 வரையிலான சீனியர் மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கலாமா அல்லது ஆன்லைன் வாயிலாக கற்றல் -கற்பித்தல் பணிகளை தொடரலாமா என்பது குறித்து பள்ளிகளே முடிவு எடுக்க அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. நடப்பு நிலவரப்படி டெல்லியில் கம்பளி போர்வை போல படிந்திருக்கும் காற்று மாசு தணிவதாக தெரியவில்லை.

டெல்லியில் பள்ளி மாணவ மாணவியர்

உலக சுகாதார நிறுவனம் அனுமத்தி கட்டுப்பாடுள்ள காற்று மாசு அளவைவிட டெல்லியின் பாதிப்பு 80 முதல் 100 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் கண்கள் மற்றும் நுரையீரல் பாதிப்புக்கு அதிகமானோர் ஆளாகி உள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

தமிழகம் முழுவதும் இன்று ரேஷன் கடைகள் இயங்கும்!

பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!

கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!

பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?

ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!

SCROLL FOR NEXT