டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு
டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு 
தேசம்

புதிய புகார்... கேஜ்ரிவாலுக்கு மார்ச் 16-ல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

காமதேனு

டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை அளித்த புதிய புகாரின் கீழ், வரும் 16-ம் தேதி நேரில் ஆஜராக டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்பி-யான சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த, அமலாக்கத் துறை அவருக்கு தொடர்ச்சியாக சம்மன்களை அனுப்பி வருகிறது. இதுவரை 8 சம்மன்கள் அனுப்பப்பட்ட நிலையில் கேஜ்ரிவால் எந்த சம்மனுக்கும் ஆஜராகவில்லை.

டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம்

தனக்கு அனுப்பப்படும் சம்மன்கள் சட்ட விரோதமானவை என அவர் தெரிவித்து வருகிறார். இதனால் அதிருப்தி அடைந்த அமலாக்கத் துறை கேஜ்ரிவால் மீது டெல்லி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

இந்நிலையில், சமீபத்தில் கடைசியாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு கடந்த 4-ம் தேதி பதிலளித்த கேஜ்ரிவால், வரும் 12-ம் தேதிக்குப் பிறகு வீடியோ கான்பரன்சிங் முறையில் விசாரணைக்கு ஆஜராகத் தயார் என பதிலளித்திருந்தார்.

இந்நிலையில், 4 முதல் 8 வரையிலான சம்மன்களுக்கு கேஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததற்காக ஐபிசி மற்றும் பிஎம்எல்ஏ சட்டப் பிரிவுகளின் கீழ் அமலாக்கத்துறை புதிய புகாரை பதிவு செய்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் மார்ச் 16-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ரயில்வே துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு... 9,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்!

ராணுவக் கல்லூரியில் படிக்க விருப்பமா?... மாணவர்கள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்!

பள்ளியில் பாடம் நடத்தும் ரோபோ ஆசிரியை... அசத்தும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

ராமேஸ்வரம் கஃபே வழக்கில் பரபரப்பு... குண்டு வைத்தவர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்?

அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கத் தயார்... டீல் பேசிய பாஜக: புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி!

SCROLL FOR NEXT